புதுச்சேரியில் "போதும்" என்றாரா ரங்கசாமி? பாஜகவுக்கு எதிரான பிளான் B: திமுக விரித்த வலை பலிக்குதா?
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அரசியல் களம் தகிக்க ஆரம்பித்துவிட்டது.. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.. காரணம், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள், அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடக்கிறது பக்கத்து மாநிலத்தில்?
முதல்வர் ரங்கசாமிக்கும் பாஜகவுக்கும் இடையிலான அதிருப்தி என்பது இன்று நேற்று தொடங்கியதல்ல, கூட்டணி அமைந்த காலத்திலிருந்தே அதிகாரப் பகிர்வு மற்றும் நிர்வாக ரீதியான தலையீடுகளால் அது புகைந்து கொண்டே இருந்தது..

புதுச்சேரி ரங்கசாமி
குறிப்பாக, மத்திய அரசிடமிருந்து மாநில அந்தஸ்து பெறுவது அல்லது கூடுதல் நிதி பெறுவது போன்ற முக்கிய திட்டங்களில் பாஜக போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்கிற ஆதங்கம் ரங்கசாமி தரப்பில் வலுவாக உள்ளது.. பல முக்கிய மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முற்படும்போது, அதிகார மையங்களின் முட்டுக்கட்டைகளால் ரங்கசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது..
இந்த அதிருப்தியின் உச்சமாகவே, தற்போது திமுகவுடன் ரங்கசாமி நெருக்கம் காட்டுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.. அரசியல் வட்டாரங்களில் திமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுக்கள் பலமாக அடிபடுகின்றன..
ஆனால் இது சாத்தியமா???? அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற பழமொழியே இதற்கு பதிலாக இருக்கிறது.. தற்போதைய சூழலில் ஆளும் அரசு மீது மக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி அலை நிலவி வருவதை ரங்கசாமி உணர்ந்துள்ளார்..
திமுக - காங்கிரஸ்
இந்நிலையில், புதுவையில் திமுக மற்றும் காங்கிரஸ் மீண்டும் கூட்டணி அமைத்து, கடந்த முறையைப் போலவே சுமுகமான தொகுதி பங்கீடு செய்து கொண்டால், இக்கூட்டணி எளிதாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்..
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில், ஒவ்வொரு தொகுதியிலும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் தலா இரண்டுக்கும் மேற்பட்ட ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிட ஆர்வம் காட்டி வருவது அக்கூட்டணியின் பலத்தையே காட்டுகிறது.. இந்த வேட்பாளர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதால், வாக்காளர்கள் இப்போது மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்..
மறுபுறம், தமிழக அரசியல் மாற்றங்களைக் கவனித்து வரும் ரங்கசாமி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடனும் நெருக்கம் காட்டி வருவதையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது..
விஜய்யுடன் ரங்கசாமி கொண்டுள்ள இந்த தனிப்பட்ட நட்பு, வரும் தேர்தல்களில் அவருக்கு ஒரு கூடுதல் பலமாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது..
தவெக விஜய்
குறிப்பாக, இளைஞர்களின் வாக்குகள் மற்றும் விஜய்யின் ரசிகர் மன்ற செல்வாக்கு புதுச்சேரியில் கணிசமாக இருப்பதால், இது பாஜகவுக்குப் பெரிய சவாலாக மாறக்கூடும்.. பாஜகவுடனான கூட்டணி ரங்கசாமிக்கு நிர்வாக ரீதியாகப் பெரும் சுமையாக மாறியுள்ள நிலையில், அவர் ஒரு மாற்று சக்தியை நோக்கி நகர்வது உறுதியாகத் தெரிகிறது..
திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் முட்டுக்கட்டைகளை உடைக்க, அவர் திமுக அல்லது விஜய் போன்ற புதிய சக்திகளுடன் கைகோர்க்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன..
பாஜகவுக்கு செக்?
புதுச்சேரி மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் மூத்த தலைவர் ரங்கசாமி.. அதனால் இப்போது ஏற்பட்டுள்ள அதிருப்திகளை சமாளிக்க தவறினால் அது ஆட்சிக்கே ஆபத்தாக முடியும் என்பதையும் நன்கே அறிவார்.. அதனால்தான் பாஜகவின் பிடியிலிருந்து விலகி, மக்கள் ஆதரவுள்ள கட்சிகளுடன் இணக்கமான சூழலை உருவாக்க அவர் முயன்று வருவதாக தெரிகிறது..
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் எழுச்சியும், வேட்பாளர்களின் அதீத ஆர்வமும் அந்த அணியை வலுவான நிலையில் நிறுத்தியுள்ளது.. மொத்தத்தில், ரங்கசாமியின் அடுத்தகட்ட நகர்வு புதுச்சேரி அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.. எது எப்படியிருந்தாலும், வரும் நாட்களில் புதுச்சேரி அரசியல் களம் இன்னும் பல அதிரடி மாற்றங்களை சந்திக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications