நான் பிரசாரத்துக்கு விமானத்தில் செல்வது எதுக்கு தெரியுமா.. உண்மையை போட்டு உடைத்த கமல்!
புதுச்சேரி:நான் விமானத்தில் சென்று பிரசாரம் மேற்கொள்வதை சிலர் தொடர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர். விமானத்தில் பறப்பதே வேட்பாளர்களுக்குப் பல்லக்குத் தூக்கத்தான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
Recommended Video
எங்கள் வேட்பாளர்கள் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்க வந்தவர்கள் இல்லை. அவர்கள் மக்கள் சேவகர்கள் என்றும் கமல்ஹாசன் கூறினார்.

புதுவையில் கமல் பிரசாரம்
புதுவையில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கும் தலைவர்களின் பிரசாரத்தால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனி விமானத்தில் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார்.

மக்களில் ஒருவராக விளங்குவோம்
பின்னர் ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது:- மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு உரிய அதிகார தோரணையுடன் இல்லாமல் மக்களில் ஒருவராக விளங்குவார்கள். இவர்கள் புதுச்சேரியை புதுப்பிக்கும் வீரர்கள் என்பதால் புதுவை புதுப்பொலிவு பெறும்.

சேவை பெறும் உரிமை
நான் விமானத்தில் சென்று பிரசாரம் மேற்கொள்வதை சிலர் தொடர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர். நான் விமானத்தில் பறப்பதே வேட்பாளர்களுக்குப் பல்லக்குத் தூக்கத்தான். மக்களின் பல்லக்கு என் தோளில் இருக்கிறது. அதைத் தோளில் தூக்கி சுமக்க வந்துள்ளேன். எங்கள் வேட்பாளர்கள் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்க வந்தவர்கள் இல்லை. அவர்கள் மக்கள் சேவகர்கள். அவர்களிடம் சேவை பெறும் உரிமை உங்களுக்கு இருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அறியலாம்
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எங்கள் வேட்பாளர்கள் தொகுதி நிதியை மக்களுக்கு முறையாக செலவழிப்பார்கள். எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் செலவு செய்த விபரத்தை நீங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம் என்று கமல்ஹாசன் கூறினார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பல இடங்களுக்கு பிராசாத்துக்கு ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தில் செல்கிறார். தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதே இதுபோல் ஹெலிகாப்டரில் பறப்பதற்குதான் என்று அவர் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications