தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி.. தட்டிக்கேட்ட அண்ணனை கொன்ற 17 வயது சிறுவன்.. காரைக்காலில் ‛திடுக்’
புதுச்சேரி: காரைக்காலில் 13 வயது சிறுவன் கொலை வழக்கில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தனது தங்கையிடம் தவறாக நடக்க முயன்றதை தட்டிக்கேட்டதால் அவனை 17 வயது சிறுவன் படுகொலை செய்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே நிரவி பகுதியை சேர்ந்தவர் பூட்டிய வீட்டில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் நேற்று இறந்து கிடந்தார். சிறுவனின் உடலில் பல இடங்களில் கத்தியால் வெட்டியது மற்றும் கத்தியால் குத்தியது போன்ற காயங்கள் இருந்தன.

இதன்மூலம் அந்த சிறுவனை மர்மநபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் உடல் கைப்பற்றப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு அந்த வீட்டில் இருந்து கத்தி, கையுறை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் இறந்து கிடந்த சிறுவனுக்கு 13 வயது என்பதும், அவர் 8ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. அதோடு நேற்று காலையில் வீட்டில் அருகே சிறுவன் விளையாடி கொண்டிருந்ததும், அதன்பிறகு மாயமான நிலையில் பிணமாக மீட்கப்பட்டதும் தெரியவந்தது. சிறுவனின் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
13 வயது சிறுவன் வெட்டிக் கொலை.. இரவு நேரத்தில் கொடூரம்.. அலறிய காரைக்கால்!
இந்த விசாரணையில் அந்த பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவனை தேடியபோது அவர் தனத தாயுடன் சேர்ந்து தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்த போலீசார் மயிலாடுதுறையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த 17 வயது சிறுவனையும் அவரது தாயாரையும் இன்று பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் கொலையான 13 வயது சிறுவனின் தாய் கண்ணீர் மல்க 17 வயது சிறுவன் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛என் மகனை கொலை செய்தவன் என் மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளான். தங்கையிடம் ஏன் தவறான கண்ணோட்டத்தில் அழைத்தாய் என என் மகன் சண்டையிட்டுள்ளார். இதனால் கோபமான அந்த நபர் என் மகன் வாயை பொத்தி கத்தி வைத்து வெட்டியுள்ளார்.
சத்தம் வெளியே கேட்காமல் இருக்க துணியை வைத்து வாயை அடைத்துள்ளார். என் பையனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சார்பில் போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்காலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications