வாட்ஸ் அப் மெசேஜ் வைத்தே 5 கோடி சுருட்டிய கேரள கும்பல்! புதுவையை சேர்ந்த பெண்ணிடம் நடந்த நூதன மோசடி
புதுவை: புதுவையில் தனியார் நிறுவன மேலாளரிடம் வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பி ரூ.5 கோடியே 10 லட்சம் ரூபாய் ஆட்டையை போட்ட கேரளாவை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுவையை சேர்ந்தவர் சுகியா. இவர் புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஒன்று வந்தது. அந்த மெசேஜானது அவரது நிறுவன உரிமையாளர் போல மெசேஜ் வந்துள்ளது. அதில், நிறுவனத்தின் பணிகளுக்காக குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு உடனடியாக ரூ.5 கோடியே 10 லட்சம் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நமது செல்போன் நம்பருக்கு பெயரோடு குறுஞ்செய்தி வந்துள்ளது. உரிமையாளருக்கு ஏதோ அர்ஜண்ட் என நினைத்து சுகியாவும் அந்த அக்கவுண்ட் நம்பருக்கு 5 தவணையாக 5 கோடியே 100 லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளார். இதையடுத்து உரிமையாளருக்கு பணம் வந்துவிட்டதா என்று போன் செய்து கேட்டுள்ளார். அப்போது நான் அப்படி ஏதும் மெசேஜ் அனுப்பவில்லை என்று தெரிவித்தார். இதனால் ஒரு நிமிடம் அதிர்ந்து போன சுகியா உடனடியாக சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி செய்த நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தினர். இதில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஆலம்முலா, இஸ்லாம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து இருந்தனர்.
மேலும் இந்த மோசடி சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மலப்புரத்தை சேர்ந்த சகத், நவீன் மற்றும் வட்டபாறையை சேர்ந்த அஜித் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் தனிப்படை போலீசார் கேரளா விரைந்தனர். அங்கு திருவனந்தபுரத்தில் ஓட்டலில் தங்கியிருந்த 3 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட இணையதளம் மூலம் இந்த கும்பலினர் மோசடி செய்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை தொடங்கி, இணையதளம் மூலம் மோசடி செய்யும் பணத்தை அந்த வங்கி கணக்குகளில் மாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே வாட்ஸ் அப், மெசேஜ்களில் வரும் குறுஞ்செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்த பின்னரே பணம் அனுப்ப வேண்டும் என்றும் தேவையில்லா லிங்குகளை கிளிக் செய்யக்கூடாது என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications