நில வகைப்பாடு, கிரைய பத்திரம்.. வில்லங்க சான்றிதழ்.. பத்திரப்பதிவு புகாருடன் முதல்வரிடம் போன பெயிரா
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள நிலங்களை வகைப்படுத்தி, அதற்கான முழுமை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு பெயிரா கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் புதுவை மாநில பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பு ஆலோசனை கூட்டம் புதுச்சேரியில் மாநில தலைவர் அன்பரசு தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், நேரு, வைத்தியநாதன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர், என பலரும் கலந்து கொண்டு இந்த கூட்டத்தை சிறப்பித்தனர்.
தீவிர ஆலோசனை: தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, புதுச்சேரி மாவட்டத்தின் வீட்டுவசதித் துறை, பதிவுத்துறை, வருவாய்த்துறை, உள்ளிட்ட துறைகளில் நிலவுகின்ற பிரச்சனைகள் குறித்து விரிவாக உரையாற்றினார்.. அத்துடன் புதுச்சேரியில் நிலவிவரும் சிக்கல்களை களைவதற்கான வழிமுறைகள் குறித்தும் நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்தார்.
பிறகு நிர்வாகிகளின் தீவிர ஆலோசனைக்கு பிறகு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள நிலங்களை வகைப்படுத்தி, அதற்கான முழுமை திட்டத்தை கொண்டு வர வேண்டும், ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வாயிலாகவே விண்ணப்பித்து எளிமையான முறையில் அனுமதி பெறும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில முதல்வர் உறுதி: இந்த தீர்மானங்கள் அடங்கிய கடிதத்தை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து, பெயிரா பொறுப்பாளர்கள் நேரில் சென்று வழங்கினார்கள். இதையடுத்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ரங்கசாமி, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனையை போக்கும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்துள்ளார். புதுச்சேரி மக்களுக்களின் நலனை கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்ட ஒருசில முக்கிய தீர்மானங்கள் இவைகள்தான்:
ரியல் எஸ்டேட்: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், அபிவிருத்தியாளர்கள் தங்களின் திட்டங்களை பதிவு செய்வதற்கும், நியாயமான முறையில் கட்டணங்களை விதிப்பதற்கும், காலம் நேரம் வீண் விரயங்களை தவிர்த்து, உடனடியாக பதிவு செய்து (RERA) உத்தரவு பெறுவதற்கும் அரசு வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள நிலங்களை வகைப்படுத்தி, அதற்கான முழுமை திட்டத்தை கொண்டு வந்து, அபிவிருத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வாயிலாகவே விண்ணப்பித்து எளிமையான முறையில் அனுமதி பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
ஒற்றைச்சாளர முறை: மேலும் மக்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து, அவைகளை தொடர் கட்டிட பகுதியாக வகைப்படுத்திடவும். மேலும் முழுமை திட்டத்தில் தற்போதுள்ள ஒரே சர்வே எண்ணில் அமைந்துள்ள நிலங்களுக்கு நான்கு ஐந்து வகைபாடு உள்ளது. இதுபோன்ற குளறுபடிகளையும் சரி செய்ய வேண்டுகிறோம். இதனால் தற்பொழுது பொதுமக்கள் முதல்வர், மாவட்ட ஆட்சியர், செயலர் போன்ற அலுவலகங்களை அணுக வேண்டியுள்ளது இதனையும் அரசு தவிர்க்க வேண்டுகிறோம்.
காரைக்காலில் முழுமை திட்டம் தயாரிக்க கடந்த 2015ல் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்து அதற்கு 1,68,00,000 அரசு பணம் ஒதுக்கியது. ஆனால் இன்று வரை முழுமை திட்டம் தயாரிக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் நில வகைபாட்டில் பல்வேறு குளறுபடிகள் தொடர்ந்து நிலவுகின்றன, இதனால் பொதுமக்கள் பெருமளவில் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே அரசு உடனடியாக காரைக்காலில் முழுமை திட்ட பணியை விரைந்து முடித்திட வேண்டுகிறோம்.
பத்திரப்பதிவு: புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட துறைக்கு வேறு துறையில் பணியாற்றும் அதிகாரியை மாற்றி அமைக்கிறது. இதனால் எந்த துறையில் எது செய்தால் நல்லது என்று யாருக்கும் சரிவர புரிதல் இல்லை. இப்படிப்பட்ட சூழலை மாற்றி ஒரு துறை சார்ந்த அனுபவம் மிக்க மூத்த அதிகாரியை தொடர்ந்து பணி அமர்த்தினால் அந்த துறை சார்ந்த நிலைகள் மாறும். குறிப்பாக பதிவு அலுவலகத்தில் சரியான பதிவாளர் இல்லை.
பதிவுத்துறை அனுபவம் இல்லாத வேறு துறை சார்ந்த அதிகாரியை நியமித்தால் பத்திர பதிவு செய்வதில் அதிக குளறுபடிகள் ஏற்படுகிறது. தவறுதலாக கிரைய பத்திரம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புகுள்ளாகின்றனர்.
அரசு இதனை கவனத்தில் கொண்டு சரியான அனுபவமிக்க அதிகாரியை நிலையாக நியமிக்க வேண்டுகிறோம். மேலும் பதிவுத்துறையில் 1865 ஆம் ஆண்டு முதல் துவக்க காலத்தில் பதியப்பட்டு பராமரிக்கப்படும் ஆவணங்களை ஒளி வருடல் செய்து பாதுகாக்கவும், வில்லங்க சான்றிதழை இலவசமாக இணையதளம் வாயிலாகவே பார்வையிடவும், பதிவிறக்கம் செய்யவும் வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
சுற்றுலா வளர்ச்சி: புதுவை மற்றும் காரைக்கால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வாய்ப்புள்ள பகுதிகளில் இம்மாநில மக்களின் மேம்பாட்டிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் ஏதுவாக வேளாண்மை மற்றும் சுற்றுலாவை தவிர தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, உற்பத்தி நிறுவனங்கள், சிட்கோ மற்றும் சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஒருங்கிணைந்த மற்றும் விரிவான சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை அமைக்க வேண்டும்.
அதேபோல, புதிய விமான நிலைய மேம்பாடு, துறைமுக மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றை அமைத்தும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சாலை திட்டங்களை விரைந்து முடிக்கவும், மேலும் விரைவான மற்றும் விரிவான சாலை திட்டங்களை கொண்டு வரவும், பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்களை தடுக்கவும், எதிர்கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், அரசு கூடுதல் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என பெயிரா தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications