ஏன் பேசலை.. இங்கே பாரு ஸ்டூல்.. தொங்க போறேன்.. வீடியோ காலில் மிரட்டிய காதலன்.. பரிதாப மரணம்!

காதலி பேசாததால் வக்கீல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: "ஏன் என்கூட பேசல.. இங்க பாரு ஸ்டூல்.. கயிறு.. நான் தற்கொலை செய்ய போகிறேன்" என்று வீடியோகாலில் வருங்கால மனைவியிடம் சொன்ன காதலன்.. நிஜமாகவே தூக்கில் தொங்கிவிட்டார்!

புதுவை கனகசெட்டி குளத்தை சேர்ந்த விவசாயி கோதண்டம். இவரது மகன் சுரேஷ்.. 31 வயதாகிறது.. இவர் ஒரு வக்கீல்! சட்டகல்லூரியில் படித்தபோது ஒரு பெண்ணை காதலித்தார்.. கடலூரை சேர்ந்த அந்த பெண்ணும் சுரேஷை விரும்பினார். வீட்டில் விஷயம் தெரியவந்தது.

lawyer committed suicide near puducherry

இரு தரப்பினரே எதிர்ப்பு எதுவும் சொல்லாமல் பிள்ளைகள் விருப்பம்தான் தங்கள் விருப்பம் என்று சொல்லிவிட்டனர்.. இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனது.. வருகிற 27-ம் தேதி கல்யாணம் வைத்திருந்தார்கள். இன்னும் பத்திரிகை அடிக்கவில்லை.. அதற்கான இன்விடேஷன் செலக்ட் செய்வதற்காக காதலி, புதுச்சேரி வந்திருந்தார்.

சுரேஷூம் அவரை அழைத்து கொண்டு, கல்யாண பத்திரிகை விற்பனை கடைக்கு சென்றனர்.. இதற்கு பிறகு பல்வேறு இடங்களுக்கும் காதலியை அழைத்து சென்றார் சுரேஷ். நைட் நேரம் ஆகிவிட்டதால், அவரை கடலூருக்கு பஸ் ஏற்றி அனுப்பினார். இதனிடையே சுரேஷ், அந்த பெண்ணுடன் செல்போனில் பேச முயன்றார்.. ஆனால் போனை அவர் எடுக்கவே இல்லை.. திரும்ப திரும்ப கூப்பிட்டு பார்த்தும் காதலி செல்போன் எடுத்து பேசவே இல்லை.. அதனால், 11 மணி அளவில் வீடியோ கால் செய்தார்.

அப்போது, "ஏன் என் போனை எடுக்கல.. ஏன் என்கூட பேசலை.. நீ என்கூட பேசாததால், நான் தற்கொலை செய்ய போகிறேன்.." என்று சொல்லி கொண்டே, ஒரு ஸ்டூல் மீது ஏறி நின்று ஃபேனில் தூக்கு மாட்டினார்.. அவ்வளவுதான் வீடியோவில் தெரிந்தது.. அதற்கு பிறகு போன் ஆஃப் ஆகிவிட்டது.

ஏதோ விளையாட்டுக்காகத்தான் சுரேஷ் இப்படி செய்கிறார் என்று காதலி நினைத்தாலும், உள்ளுக்குள் லேசாக பயம் வந்துவிட்டது.. அதனால், சுரேஷ் வீட்டு பக்கத்தில் வசிக்கும் நண்பர் சிவசக்தியை போனில் கூப்பிட்டு விஷயத்தை சொன்னார்.

இதையடுத்து, சிவசக்தியும் சுரேஷ் வீட்டுக்கு சென்றார். ஆனால், அங்கு சுரேஷின் ரூம் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டி பார்த்தும் கதவை திறக்காததால், அங்கிருந்தோர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார்... அப்போதுதான் சுரேஷ் நிஜமாகவே தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

அவரை மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றும், ஏற்கனவே சுரேஷ் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள். இது சம்பந்தமாக புதுவை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உண்மையிலேயே சுரேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விளங்கவே இல்லை.. காதலி பேசவில்லை என்பதால்தான் தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் அந்த பெண் உட்பட அனைவரிடமும் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+