புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பட்ஜெட் திட்டங்களுக்கு நிதி இருக்கா.. நாராயணசாமி கேள்வி.. ஆஹா ஓஹோவென கிரண் பேடி பாராட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    புதுச்சேரி: ஜி எஸ் டி-யால் முதலீட்டாளர்கள் வரவில்லை..! புதுவை முதல்வர் கடும் குற்றச்சாட்டு...

    புதுச்சேரி: புதுச்சேரியில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு 2 முதல் 3 ரூபாய் வரை விலையை உயர்த்தி, வரி வருவாயை பெருக்குவதற்கு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி மாநிலத்தில் 2019 - 2020 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாகவும், பட்ஜெட்டில் இடம் பெறவேண்டிய அம்சங்கள் குறித்தும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்றனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு முல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

    மகளிர் சுய உதவிக் குழுக்கள்

    மகளிர் சுய உதவிக் குழுக்கள்

    அப்போது அவர் கூறுகையில், அமைச்சரவை கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கியில் வாங்கு கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும். மத்திய அரசு வட்டி தள்ளுபடி செய்வதோடு மட்டுமல்லாமல், இனி வரும் காலங்களில் மாநில அரசும் 3 சதவீத வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 2500 மகளிர் சுய உதவி குழுக்கள் பயன்பெறும் என்றார். இந்த திட்டத்திற்கு அன்னை இந்திராகாந்தி பெண்கள் முன்னேற்ற திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளோம்.

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

    புதுச்சேரியில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு 2 முதல் 3 ரூபாய் வரை விலையை உயர்த்தி, வரி வருவாயை பெருக்குவதற்கு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஏற்கனவே திட்டமிட்டபடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நிதியமைச்சரே பதில் சொல்லுங்க

    நிதியமைச்சரே பதில் சொல்லுங்க

    மேலும் வெள்ளிக்கிமை தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் திட்டங்களை அதிகமாக அறிவித்துள்ளனர். அதற்கான நிதி ஆதாரமும் அதிகமாக தேவை.. இதற்கான நிதி எங்கிருந்து வரும் என தெரியவில்லை. இதற்கு நிதியமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

    வளர்ச்சி பட்ஜெட்

    வளர்ச்சி பட்ஜெட்

    இதனிடையே மத்திய பட்ஜெட்டுக்கு வாழ்த்து தெரிவித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார். அதில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய, வெளிப்படைத்தன்மை வாய்ந்த பட்ஜெட் என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை பாதிக்காத வகையில் பட்ஜெட் உள்ளது என கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.

    English summary
    puducherry cm narayanasamy decided liquor prices increased to to 3 rupees for foreign liquors
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X