உச்சிக்கு ஏறிய காமம்.. கணவர் மீது காரை ஏற்றிய புவனேஸ்வரி.. 2 மாதமாக நடித்தே ஏமாற்றிய பயங்கரம்!

கணவனை கார் ஏற்றி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: உச்சிக்கு ஏறிய காமம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கார் ஏற்றியே கொன்றுவிட்டார் புவனேஸ்வரி.. 2 மாதமாக விஷயத்தை மறைத்து போலீசுக்கே தண்ணி காட்டியவர், இப்போது வசமாக சிக்கி உள்ளார்!!

புதுச்சேரியை சேர்ந்தவர் கந்தசாமி.. 41 வயதாகிறது.. தொண்டமா நத்தத்தில் ஒரு பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.. இவரது மனைவி புவனேஷ்வரி... கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆகிறது. 7 வயதிலும் 4 வயதிலும் 2 மகன்கள் உள்ளனர்.

லிங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்த அஜித்குமார் கந்தசாமியின் நண்பர்.. அவரும் டிரைவர்தான்.. கல்யாணம் ஆகி குழந்தையும் உள்ளது.. நட்பு காரணமாக அடிக்கடி வீட்டுக்கு வந்து போக இருந்துள்ளார்.

கந்தசாமி

கந்தசாமி

அப்படித்தான் புவனேஸ்வரியுடன் லவ் வந்துவிட்டது.. புவனேஸ்வரிக்கு சாப்பிட நிறைய பொருட்களை வாங்கி தந்தார்.. கிப்ட்களை வாங்கி தந்தும் அசத்தினார். இதை தவிர செல்போனிலும் காதல் ரசம் சொட்டியது.. விஷயம் கந்தசாமிக்கு தெரிந்ததும் மனைவியை கண்டிக்க, அவரோ கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டார். மனைவியை சமாதானப்படுத்த அழைத்து வர கந்தசாமி சென்றபோது, அவரை புவனேஸ்வரியின் சகோதர் அடித்து விரட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

இதனால் கந்தசாமி விரக்தியில் காணப்பட்டார்.. கடந்த மார்ச் 14-ம் தேதி, பத்துக்கண்ணு பகுதியில் இவர் பைக்கில் சென்ற போது, எதிரே வந்த கார் மோதிவிட்டது.. இதனால் நிலைதடுமாறி கீழே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.. தீவிர சிகிச்சை தந்தும் பலனளிக்காமல் மார்ச் 17-ம் தேதி கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து

விபத்து

கந்தசாமி மீது ஏற்றிய கார் நிற்காமல் அதே வேகத்தில் அப்போது சென்றுவிட்டது.. அதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்தும், அந்த கார் பற்றியும் விசாரித்து வந்தனர். அப்போதுதான் புவனேஷ்வரி மீது சந்தேகம் வலுத்தது.. கணவனை பறிகொடுத்த புவனேஸ்வரி ஒரு கவலையும் இல்லாமல் இயல்பாக இருந்துள்ளார்.. அவரது வீட்டில் அஜித்குமாரின் நடமாட்ட ஓவராக தென்பட்டது. உறவினர்களும் இதை கவனித்து சந்தேகப்பட்டனர்.

புவனேஸ்வரி

புவனேஸ்வரி

இந்த சமயத்தில்தான் கந்தசாமியின் அம்மா ஒரு ஆடியோவை போலீசில் தந்தார்.. அதில், 10 நிமிடத்துக்கு கந்தசாமி அழுது பேசியிருந்தார்.. இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு பேசிய ஆடியோ அது.. "எனக்கு ஏதாவது நடந்துடுச்சுன்னா அஜித்குமாரும், புவனேஷ்வரியும்தான் காரணம்" என்று சொல்லி இருந்தார். இதை வைத்து விசாரணை ரீதவிரமானது.. அப்போதுதான் கணவனை காரை விட்டு ஏத்தியது புவனேஸ்வரி என்று தெரியவந்தது.

கைது

கைது

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கந்தசாமியை தீர்த்துக்கட்டவே 2 பேரும் சேர்ந்து பிளான் செய்தே இந்த கொலையை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. காரை ஓட்டி கொன்றது லிங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் என்பதும் தெரியவந்தது.. இப்போது 3 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+