ஆண்களுடன் பேசாதே என்று அடித்தார்... விஷம் வைத்து கொன்றேன் - புதுச்சேரி ஸ்டெல்லா
சந்தேகப்பட்டு சித்ரவதை செய்து அடித்த கணவனை கொன்று சாக்குமூட்டையில் கட்டி வைத்த மனைவியை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
புதுச்சேரி: சந்தேகப்பட்டு அடித்தால் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று குடும்பம் நடத்திய மனைவிகள் அந்த காலத்தில் இருந்தனர். இப்போதோ கூலிப்படை வைத்து கொன்று சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி போட்டு விடுகின்றனர். புதுச்சேரியில் இந்த பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலையான கமலக்கண்ணன் லாரி டிலைவர். அவரது உடல் சில தினங்களுக்கு முன்பு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது.
முதலியார்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் கமலக்கண்ணனின் மனைவி ஸ்டெல்லாதான் இந்த கொலைக்குக் காரணம் என்று தெரியவந்தது. இந்த கொலையை தான் மட்டும் தனியாக செய்யவில்லை என்றும் சகோதரி ரெஜினா, ரவுடி தமிழ்மணி ஆகியோரின் உதவியுடன் இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார்.

ஸ்டெல்லாவிற்கும் கமலக்கண்ணணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடிப்பழக்கம் காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை நடப்பது வாடிக்கை. ஸ்டெல்லாவிற்கு ஆண் நண்பர்கள் அதிகம். செல்போனில் அடிக்கடி ஆண்களுடன் பேசிக்கொண்டிருப்பார். இது கமலக்கண்ணனுக்கு பிடிக்கவில்லை.

ஸ்டெல்லாவை கண்டித்த கமலக்கண்ணன் அடித்து சித்ரவதை செய்துள்ளார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத ஸ்டெல்லா, கணவரை கொல்ல அக்கா ரெஜினா உடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டார். அக்கா வீட்டிற்க வரவழைத்து ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார். மயங்கி விழுந்த கணவரை ரவுடி தமிழ் மணியின் துணையோடு கழுத்தை நெரித்து கொண்டு சாக்கு மூட்டையில் கட்டியுள்ளனர்.

இரவில் ஆட்கள் யாருமில்லாத நேரத்தில் ரவுடி தமிழ்மணி அவரது நண்பர்களுடன் சடலத்தை தூக்கிக் கொண்ட போய் கழிவு நீர் வாய்க்காலில் வீசிவிட்டு வந்து விட்டனர். கணவரை கொன்ற பின்னரும் எதுவும் நடக்காதது போல இருந்த ஸ்டெல்லாவை புதுச்சேரி போலீசார் மோப்பம் பிடித்து கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ரெஜினா, ரவுடி தமிழ்மணியை போலீசார் தேடி வருகின்றனர்.

பிற ஆண்களுடன் பேசாதே என்று கூறி கண்டித்து சந்தேகப்பட்ட கணவனை அக்கா துணையுடன் கூலிப்படை வைத்து கொன்று வீசிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications