வலையில் சிக்கிய அபூர்வ எலி பூச்சி நண்டு.. ஆண் டூ பெண்ணாக மாறும் அதிசயம்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி மூர்த்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் கலைஞானம் வலையில் சிக்கிய அபூர்வ கடல் எலியை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
புதுச்சேரி மூர்த்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் கலைஞானம். இவர் வழக்கம்போல் சக மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். மீன் பிடித்துவிட்டு கரை திரும்பியதும், வலையில் இருக்கும் மீன்களை வெளியே எடுக்கும் போது நண்டு போன்று வித்தியாசமான தோற்றம் கொண்ட உயிரினம் சிக்கியிருப்பதை கண்டு ஆச்சார்யமாக பார்த்தார்.

சக மீனவர்களிடம் இதனை காட்டி கேட்டபோது, அது அரியவகை எலி பூச்சி என்பது தெரியவந்தது. வழக்கமான எலி பூச்சி 10 முதல் 50 கிராம் எடை மட்டுமே இருக்கும். கலைஞானம் வலையில் சிக்கிய எலி பூச்சியின் எடை சுமார் ஒரு கிலோ வரை எடை இருந்தது.

மருத்துவ குணம்கொண்ட இந்த எலி பூச்சியை ஏலம் விட்டால் சுமார் 5 ஆயிரம் வரை விலை போக வாய்ப்புள்ளது. ஆனால், இந்த எலி பூச்சியின் மருத்துவ குணத்தால் அதனை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு விட்டதாக கலைஞானம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், நிலத்தில் உள்ள எலியைப் போன்று தோற்றமளிக்கும் இந்த வினோத கடல் உயிரினம், நண்டு வகையைச் சேர்ந்த மச்ச நண்டு என அழைக்கப்படுகிறது. இதன் உயிரியியல் பெயர் எமிரிட்டா ஆசியாடிக்கா.

உள்நாட்டு மீனவர்கள் இதை கடல் எலி, கடல் பூச்சி என்று அழைக்கின்றனர். இவை பின்னோக்கி நகரும் தன்மை கொண்டவை. இதன் ஓட்டின் அளவு 3.5 மி.மீட்டர் வளர்ந்த பிறகு, ஆண் தன்மை மறைந்து, பெண் இனமாக மாறும் தன்மை உண்டு. இதனை சமைத்து சாப்பிடுவதை விட நேரடியாக அடுப்பு தனலில் நேரடியாக சுட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்றனர்.


-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications