வீட்டருகே மது அருந்திய இளைஞர்கள்.. தட்டிக் கேட்ட சாமியார்.. குத்திக் கொலை
Recommended Video

புதுச்சேரி: தனது வீட்டருகே மது அருந்தியதை தட்டிகேட்ட சாமியாரை கத்திரிகோலால் கொடூரமாக குத்தி கொன்ற இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி மொட்டை தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தத்துவ போதானந்த சரஸ்வதி (60) என்ற சாமியார் வசித்து வந்தார். மதுரையை சேர்ந்த என்ஜீனியரான இவர், ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டிருந்ததால் திருமணம் செய்யாமல் சாமியாராக மாறி இருந்தார்.
கடந்த10 வருடத்திற்கு முன்பு புதுச்சேரிக்கு வந்த அவர் ஒதியம்பட்டில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள், திறன் மேம்பாட்டு சொற்பொழிவுகள் போன்றவற்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவது வழக்கம். ஜோதிடமும் பார்ப்பார்.

தத்துவசாமி
தினமும் காலையில் ஆசிரமத்துக்கு செல்லும் அவர் இரவு மொட்டைதோப்பு வீட்டுக்கு திரும்பிவிடுவார். இந்நிலையில் மொட்டை தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தத்துவசாமி தனிமையில் இருந்தபோது கழுத்தில் குத்தியும், தலை, முகம் கையில் ரத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கண்டித்த சாமியார்
இந்த கொலை குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த விக்கி (22), சிவா (21) ஆகிய இரண்டு வாலிபர்கள் தத்துவ போதானந்த சாமியின் வீட்டுக்கு அருகில் மது அருந்துவது, கழிப்பறையை பயன்படுத்தி சுத்தம் செய்யாமல் விடுதல், பார்க்கிங் இடத்தில் தூங்குவது என தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் அவர்களை சாமியார் கண்டித்துள்ளார்.

தகராறு
அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், தனிமையில் இருந்த சாமியாரை இருவரும் சேர்த்து அடித்து கத்தரிகோலால் கழுத்தில் குத்தியும், கட்டையால் தலையில் அடித்தும் கொன்றுள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் கோட்டக்குப்பம் அருகே சருக்குபாலம் அருகே பதுங்கிஇருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற குற்றப்பிரிவு போலீசார் இரண்டு பேரையும் பிடித்தனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது, இருவரும் சேர்ந்து தத்துவ சாமியாரை கொலை செய்ததை ஒப்புகொண்டனர்.

வாய் தகராறு
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த பகுதியில் நாங்கள் செல்லும்போது தத்துவ சாமியார் எங்களை திட்டுவார். அன்றும் எங்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் இருந்த நாங்கள் அவரை வீட்டிற்குள் தரதரவென இழுத்துச் சென்று கையால் அடித்தும், அங்கிருந்த கத்திரிக்கோலால் கழுத்தில் குத்தியும் அறுத்தும் கொன்றோம்.

கைது
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்திய கத்திரிக்கோல் மற்றும் 2 செல்போன், ரத்தக்கறை உடைகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


Click it and Unblock the Notifications
