புதுவையில் 9 வயது சிறுமி பலாத்காரம்.. நடந்தது என்ன? கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்
புதுச்சேரி: புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அந்த சிறுமியை கொன்றது ஏன் என்பது குறித்து 19 வயது கஞ்சா பழக்கம் கொண்ட கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 9 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 2ஆம் தேதி அதாவது சனிக்கிழமை சிறுமி அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை காணவில்லை. பெற்றோரும் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் சிறுமியை இன்னும் காணவில்லை என்பதால் அக்கம்பக்கம் தேடி பார்த்துள்ளனர்.
ஆனாலும் சிறுமி கிடைக்காததால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுமி எங்கோ நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதையடுத்து அடுத்த நாளும் சிறுமியை கண்டுபிடிக்கவில்லை என கூறி பெற்றோரும் உறவினர்களும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பிறகு ரயில்நிலையம், பேருந்து நிலையம், உள்ளிட்ட இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.
ஆனாலும் சிறுமி குறித்து எந்த துப்பும் துலங்கவில்லை. நேற்றைய தினம் கூட 4 நாட்களாகியும் சிறுமியை கண்டுபிடிக்கவில்லை என கூறி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த நிலையில் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் ஒரு வாய்க்காலில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அந்த சாக்குமூட்டையை பிரித்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதையடுத்து போலீஸார் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 19 வயது கருணாஸ் என்பவரை கைது செய்தனர்.
அப்போது அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரிடம் இருந்த பிளேடை கொண்டு கை,கால்களில் அறுத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு துளி கூட வலி இல்லாமல் இருந்தார். இதனால் அவர் கஞ்சா போதைக்கு அடிமையாகியிருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை கொன்றதை ஒப்புக் கொண்டார்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை மொட்டை மாடிக்கு அழைத்து சென்றாராம். அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது இருவரிடையே பாலியல் தொல்லை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது. அப்போது கத்திய சிறுமியை அடக்க என்னவெல்லாமோ செய்தும் முடியவில்லை. இதனால் எங்கே சிறுமியின் சப்தம் அக்கம்பக்கத்தினருக்கு கேட்டுவிட போகிறது என்ற அச்சமடைந்தனர்.
இதனால் இருவரும் சிறுமியை அடித்ததில் அவர் மரணமடைந்துவிட்டாராம். இதனால் சிறுமியின் கை, கால்களை கட்டி வெள்ளை வேட்டியில் சுருட்டி சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து கைதான நபரை தங்களிடம் ஒப்படையுங்கள், பிஞ்சு குழந்தையை காம பார்வையில் பார்த்து கொன்றுள்ளார், அவருக்கு உண்டான தண்டனையை நாங்கள் வழங்குகிறோம் என போலீஸாருடன் உறவினர்களும் பொதுமக்களும் வாக்குவாதம் செய்தனர்.












Click it and Unblock the Notifications