கூட்டணி விஷயம் தொடர்பாக... ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுறோம்ங்க... நாராயணசாமி உறுதி!

Subscribe to Oneindia Tamil

புதுவை: கூட்டணித் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவர் சோனியா காந்தி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

பா.ஜ.க.வை மக்கள் கண்டிப்பாக புறக்கணிப்பார்கள். அந்த கட்சிக்கு செல்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Narayanasamy said he will abide by the decision taken by MK Stalin regarding the status of the alliance

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், அந்த மாநில முதல்வருமான நாராயணசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் கண்டிப்பாக புறக்கணிப்பார்கள். அந்த கட்சிக்கு செல்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

கூட்டணித் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவர் சோனியா காந்தி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பது இயல்புதான். அதை நாமே பேசி தீர்த்துக் கொள்வோம். கூட்டணியில் நடப்பதை வெளியே சொல்லக் கூடாது. புதுவை துணை நிலை ஆளுநரின் அலுவலகம், பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமாக உள்ளது.

புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் பக்கம் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்துக்காக புதுச்சேரி- காரைக்காலுக்கு ராகுல்காந்தி மூன்று முறை வர உள்ளார். குடியரசு தின விழாவை அடுத்து 'கிரண்பேடியே திரும்ப போ' என கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். புதுச்சேரியில் ஜனவரி 26- ஆம் தேதி நடைபெறும் டிராக்டர் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+