மே 5 ஆம் தேதி புதுவை ஜிப்மர் மருத்துவனைக்கு போறீங்களா?.. அவுட் பேசஷன்ட் பிரிவு இயங்காதாம்!

Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மே 5 ஆம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research), இதை சுருக்கமாக ஜிப்மர் (Jipmer) என அழைக்கிறார்கள். இந்தியாவில் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இதுவும் ஒன்று.

No outpatients section will be functioning on May 5 in Jipmer, Puducherry

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள இந்த பல்கலைக்கழகம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 150 இளநிலை மாணவர்களும் ஒவ்வொரு ஆண்டும் 200 முதுகலை மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

இந்த மருத்துவமனைக்கு புதுவை, தமிழகத்தை சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை மேற்கொள்ள வருகிறார்கள். இந்த நிலையில் ஜிப்மர் நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் விடுமுறை தினமான 05.05.2023 அன்று புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அதே நேரம் அவசர மருத்துவ பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்றும், ஏப்ரல் 6 ஆம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+