என்ன கொடுமைங்க இது.. ரோட்டில் குழந்தைகளை கட்டி வைத்த பெற்றோர்..! நம்ம புதுச்சேரியில் அதிர்ச்சி!
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள முக்கிய வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள சாலையோரக்கடை வாசலில் இரண்டு குழந்தைகளை கட்டிவைத்து விட்டு பெற்றோர்கள் சென்ற சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Recommended Video
புதுச்சேரியில் அதிகமாக மக்கள் நடமாடக்கூடிய முக்கிய வீதியான மிஷன் வீதி, நேரு வீதி சந்திப்பில் ஒரு கடையின் ஷட்டரில் பெற்றோர் தங்களது இரு சிறு குழந்தைகளை கட்டிப்போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
அதில் ஒரு குழந்தையின் இரு கால்களையும் கட்டி போட்டுள்ளனர். மற்றொரு குழந்தையின் அருணாகயிறு நீளமான கயிற்றில் கட்டி வைக்கப்பட்டு உள்ளது. அந்த சிறுவர்கள் நாயுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

அதிர்ச்சி வீடியோ
இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சோகத்துடன் பார்த்து சென்றது மட்டுமல்லாது அந்த குழந்தைகளின் பெற்றோரை வசைபாடியபடியும் சென்றனர். இதனை நேரில் பார்த்தவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

நரிக்குறவர் குடும்பம்
இதுகுறித்து பெரியகடை காவல் நிலைய போலீசாரிடம் கேட்டபோது, நரிக்குறவர் குடும்பத்தை சார்ந்த சிலர் இதுபோன்று குழந்தைகளை நகர பகுதிக்கு அழைத்து வந்து வியாபாரம் செய்யும் போது சிறுவர்கள் தொலைந்து போய் விடக்கூடாது என்பதற்காக அவர்களை கட்டிவைத்துவிட்டு செல்வதும், பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்களை அழைத்து செல்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

போலீசார் எச்சரிக்கை
அதுபோன்று தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த புகார் வந்தவுடன் சம்பந்தப்பட்ட பெற்றோர்களை அழைத்து பெற்றோராக இருந்தாலும் குழந்தைகளை கயிற்றால் கட்டி வைக்கக்கூடாது என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர்.

கடும் கண்டனம்
குழந்தைகளை சாலையோரத்தில் கட்டிபோட்டுள்ளது கல்நெஞ்சம் உளளவர்களையும் கரைய வைத்துவிடும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பெற்றோரை சமூக வலைதள வாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications