ஹேப்பி நியூஸ்.. புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.2.43 குறைகிறது.. வாட்வரி 3% குறைக்க ஆளுநர் ஒப்புதல்
புதுச்சேரியிலும் பெட்ரோல்விலை குறைகிறது
புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் வரியில் 3% குறைக்க அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஒப்புதல் அளித்திருக்கிறார்... இதையடுத்து புதுச்சேரியில் பெட்ரோல் விலை 2.43 ரூபாய் குறைகிறது..!
வழக்கமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்துதான், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்களுக்கான விலையை நிர்ணயித்து வருகின்றன..
அதுமட்டுமின்றி சில்லறை விற்பனையில் மத்திய மாநில அரசுகள் வரிகளை விதிப்பதால், பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உச்சத்தை எட்டியுள்ளது.

மேகாலயா
நாடு முழுவதும் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை, சில மாநிலங்கள் குறைத்துள்ளன... அந்த வகையில், ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் ஒரு ரூபாயும், அசாமில் 5 ரூபாயும் குறைக்கப்பட்டது... அதேபோல, மேகாலயாவில் பெட்ரோல் விலையில் 7 ரூபாய் 40 காசுகளும், டீசல் விலையில் 7 ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளதுடன், மதிப்புகூட்டு வரி 2 ரூபாயும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுவை
தமிழகத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரிலும், பெட்ரோல் விலை மீதான மதிப்பு கூட்டு வரி 3 ரூபாய் குறைக்கப்பட்டது.. திமுக அரசின் இந்த அறிவிப்பானது பொதுமக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.. தமிழகம் போலவே, புதுவையிலும் பெட்ரோல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது...

பெட்ரோல்
இது தொடர்பாக அமைச்சரவையில் முடிவும் எட்டப்பட்ட நிலையில், புதுச்சேரியில் விற்கப்படும் பெட்ரோல் மீதான 3 சதவீதம் வாட் வரியை குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிற்கு துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தராஜன் ஒப்புதல் அளித்திருக்கிறார்... அதன்படி பெட்ரோல் விலை 2.43 ரூபாய் குறையும், புதுச்சேரியில் 99.52 ரூபாய் ஆகவும் காரைக்காலில் 99.30 ரூபாய் ஆகவும் பெட்ரோல் விற்கப்படும் என ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு வெளியாகி உள்ளது.

மாற்றம்
இந்நிலையில், இங்கு தமிழகத்தில், சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.20 ரூபாய், டீசல் லிட்டர் 93.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது... நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications