நேரம் கடந்தும்.. வாகனத்திற்கு உள்ளேயே இருந்த விஜய்! அவரை பேசிட்டு கிளம்ப சொல்லுங்க.. போலீஸ் வார்னிங்
புதுச்சேரி: புதுச்சேரியில் விஜய் நேரம் கடந்தும் பேசாமல் இருந்ததால் போலீஸ் தவெக கட்சிக்கு எச்சரிக்கை விடுத்தது. விஜயை பேசிவிட்டு செல்ல சொல்லுங்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
கரூர் சம்பவம் நடந்த 73 நாட்களுக்கு பின் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்தி வருகிறார். காலை முதலே புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் குவிந்து வருகின்றனர். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கும் சூழலில், விஜய்யின் பேச்சு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய் நேரத்திற்கு பேசவில்லை
அனுமதி கேட்டபடி 10.30 நேரத்திற்கு விஜய் பேசி இருக்க வேண்டும். 12.30 மணிக்கு முன் விஜய் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி இருக்க வேண்டும். ஆனால் விஜய் கூட்டம் ஆரம்பிக்க வேண்டிய 10.30 மணி நேரத்தை தாண்டியும் விஜய் பேசாமல் வாகனம் உள்ளேயே இருந்ததால் போலீசார் கோபம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் தவெக கட்சிக்கு எச்சரிக்கை விடுத்தது. விஜயை பேசிவிட்டு செல்ல சொல்லுங்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

போலீசார் தவெக நிர்வாகிகளிடம் நேரடியாக விஜயிடம் சென்று.. நீங்கள் பேசுங்கள் என்று கூறி உள்ளனர். அதன்பின் தவெக தலைவரான புஸ்ஸி ஆனந்திடம்.. நீங்கள் விஜயிடம் பேசிவிட்டு செல்ல சொல்லுங்கள். மக்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. 40 பேர் இறந்திருக்கிறார்கள்.. நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள.. என்று புஸ்ஸி ஆனந்த்திடம் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் கோபமாக கத்தினார்.
புஸ்ஸி ஆனந்த் விஜய் சீக்கிரமாக பேசிவிடுவார் என்று கூறியதற்கு.. இனியும் நேரம் கொடுக்க முடியாது பேசிவிட்டு கிளம்ப சொல்லுங்கள் என்று புஸ்ஸி ஆனந்த்திடம் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் கோபமாக கத்தினார்.
அறிவித்த நேரத்திற்கு முன்பே வந்த விஜய்
இதில் அறிவித்த நேரத்திற்கு முன்பே விஜய் வந்துவிட்டார். 15 நிமிடங்களுக்கு முன்பே விஜய் வந்துவிட்டார். ஆனால் அவர் பேசவில்லை. கேரவன் உள்ளேயே விஜய் இருந்தார். புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்திற்கு அரங்கு அமைக்க அனுமதி அளிக்கப்படாத சூழலில், விஜய்யின் பிரச்சார வாகனம் மீது நிரந்தர மைக் பொருத்தப்பட்டுள்ளது. விஜய் உள்ளேயே இருந்துகொண்டு பேசாமல் இருந்தார் . இதையடுத்தே போலீஸ் கோபம் அடைந்து.. அவரை பேசிவிட்டு செல்ல சொல்லுங்கள் என்று கோபமாக கூறினர்.கணக்குப்படி விஜய் 12.30 மணிக்கு புதுச்சேரியை விட்டே சென்று இருக்க வேண்டும். அதுவரைதான் அவருக்கு அனுமதியே வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் விஜய் நேரம் கடந்தும் விஜய் வராமல் காலம் தாழ்த்தினார்.
புஸ்ஸி ஆனந்த் பேச்சு
இதையடுத்து அவசரமாக பஸ்ஸில் ஏறி பேசிய புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரியில் நம் ஆட்சி கண்டிப்பா இருக்கும் காற்றை மறைக்க முடியுமா? ஆட்சியில் அமர்வார் விஜய். பாருங்கள் இங்கே சிறப்பாக போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். 2026ஆம் ஆண்டில் புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கும். நம்முடைய ஆட்சி கண்டிப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் நாம் ஆட்சி அமைப்போம். அதேபோல் இனியும் நாம் கண்டிப்பாக ஆட்சியை பிடிப்போம்.. அதற்கான பணிகளை நாம் செய்து வருகிறோம் என்று கூறினார். இதையடுத்தே ஆதவ் அர்ஜுனா பேசினார். அதை தொடர்ந்தே விஜய் பேச மேடைக்கு வந்தார்.












Click it and Unblock the Notifications