ரோட்டோரம் 11 லாரி.. ரூ. 1 கோடி பீர் பாட்டில்கள்.. உயிருக்கு பாதுகாப்பு கேட்கும் ஓட்டுநர்கள்..!
புதுச்சேரி: கொரோனா வைரஸ் காரணமாக கோவாவில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்ட ரூபாய் 1 கோடி மதிப்பிலான பீர் பாட்டில்கள், புதுச்சேரி எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு லாரி ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க புதுச்சேரியில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக மதுபானக் கடைகள், பார்கள், கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் கலால் துறையினர் மதுபானக் கடைகள் அனைத்தையும் சீல் வைத்து, சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

விற்பனை முடக்கம்
புதுச்சேரியில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 40 மதுபானக்கடைகளின் உரிமம் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுபான கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தாசில்தார் முதல் போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மதுபிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

பூட்டை உடைத்து திருட்டு
மேலும் சிலர் சீல் வைக்கப்பட்டுள்ள மதுபானக் குடோன்களின் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிச் செல்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் லாரி நிறைய மதுபானங்களுடன் 11 லாரிகள் புதுச்சேரி எல்லையில் வெட்ட வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடை ஒன்றிற்கு கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி கோவா மாநிலத்தில் இருந்து 11 லாரிகள் பீர் ஏற்றிகொண்டு புதுச்சேரி நோக்கி வந்தன.

பீர் லாரிகள்
அவை கர்நாடக எல்லையை கடந்து ஓசூர் வந்தபோது, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் அந்த லாரிகளால் புதுச்சேரிக்கு வரமுடியவில்லை. எனவே 26 நாட்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டன. மதுபானம் ஏற்றி செல்வதற்கான பர்மிட்டும் முடிந்துபோனதால், மீண்டும் பர்மிட் வாங்கி லாரி ஓட்டுநர்கள் கடந்த 18 ஆம் தேதி புதுச்சேரி எல்லையான கோரிமேடு எல்லையை அடைந்தனர்.

எல்லையில் நிறுத்தம்
ஆனால் அப்போது புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து மதுபானக் கடைகள் மற்றும் குடோன்கள் சீல் வைக்கப்பட்டதால் அவற்றை புதுச்சேரிக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் கடந்த 18 ஆம் தேதி முதல் அந்த லாரிகள் புதுச்சேரி எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு லாரியிலும் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

சாலையோரம் தவிக்கும் டிரைவர்கள்
அந்த லாரிகளை ஓட்டிவந்த ஓட்டுநர், கிளீனர் என மொத்தம் 14 பேர் அடிப்படை வசதியின்றியும், உணவு கிடைக்காமலும் தவித்து வருகின்றனர். குடும்பத்தை பிரிந்து ஒரு மாதத்திற்கு மேலாக நடுவழியில் தவிக்கும் அவர்களுக்கு உயிர் பயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து லாரி ஓட்டுநர்கள் கூறுகையில், புதுச்சேரியில் மதுபான குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், எங்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றோம்.

குடி வெறியர்களால் ஆபத்து
மேலும் குடிமக்களுக்கு மதுபானம் கிடைக்காததால் தற்போது குவாட்டருக்கு கூட கொலை செய்யக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. அப்படி இருக்கும் காலகட்டத்தில் லாரி நிறைய மதுபானங்களுடன் நாங்கள் உயிரை கையில் பிடித்தபடி வாழ்கிறோம். இரவு தூங்காமல் அதிகாலை வரை கண்விழித்திருந்து மதுபானங்களை பாதுகாக்கிறோம். எங்களது துயரத்தை போக்க புதுச்சேரி அரசு மதுபானங்களை ஏதாவது ஒரு திருமண மண்டபத்தில் இறக்கி வைத்து எங்களுக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications