Peak Hours முடிந்த பிறகுதான் விஜய் புதுவைக்கு வர அனுமதி! தளபதின்னு கத்திகிட்டு முண்டியடிக்க முடியாது

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகுதான் விஜய் புதுவைக்குள் வர அனுமதி அளிக்கப்படும் என காவல் துறை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. கரூர் சம்பவத்திற்கு பிறகு புதுவையில் பொதுக் கூட்டம் நடத்துகிறார் விஜய்.

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பொதுக் கூட்டம் நடத்துகிறார். முதலில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்ட நிலையில் அதற்கு அந்த மாநில அரசு மறுக்கவே, பொதுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

vijay tvk puducherry

புதுவை உப்பளம் துறைமுகம் மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. விஜயின் பிரச்சார வேன் நேற்று இரவே வந்துவிட்டது. இந்த நிகழ்வு 10.30 மணி முதல் 12 மணிக்குள் நடத்திக் கொள்ள போலீஸார் அனுமதி கொடுத்துள்ளது.

பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜய்க்கு தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர் நிர்வாகிகள் வரும் வழியில் வந்தால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானம் 20 ஏக்கர் கொண்டது. இதில் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மைதானத்தில் கட்சியினர் நிற்க பெட்டி பெட்டியாக இரும்பு தடுப்புகள் போடப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு பெட்டியிலும் 3 முதல் 4 போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க கூடுதலாக போலீஸார் பணியமர்த்தப்படுவர்.

இவர்களது பணி அந்த பெட்டியை விட்டு தொண்டர்கள் வெளியே வராமல் பார்த்துக் கொள்வதுதான். ஏனென்றால் விஜய்யின் பிரச்சார வாகனத்தை நோக்கி செல்ல தொண்டர்கள் முயற்சிப்பார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக விஜய் கூட்டங்களுக்கு கட்சியினர் அதிகாலையிலேயே வந்து கூடிவிடுவார்கள். ஆனால் இந்த முறை அப்படி கூடிவிடக் கூடாது என்பதற்காக 9 மணிக்கு மேல் பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள். அதிகாலையிலேயே வந்துவிட்டால் தண்ணீர் பற்றாகுறை, வெயில் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாட்டை போலீஸார் செய்துள்ளனர்.

vijay tvk puducherry

கியூஆர் கோடுடன் கூடிய அட்டை இருந்தால் மட்டுமே அனுமதி. இது 5 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையை போலீஸார் ஸ்கேன் செய்து அனுப்புகிறார்கள். போலி அட்டைகளை கொண்டு வருவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் விஜய் சாலை மார்க்கமாக வருகிறார். அவர் அவ்வாறு வரும் போது கூட்ட நெரிசல் ஏற்படக் கூடாது என்பதால் கல்லூரிக்குச் மாணவர்கள் சென்ற பிறகும், அது போல் அலுவலகத்திற்கு மக்கள் சென்ற பிறகும்தான் விஜய் நகருக்குள் வர அனுமதி அளிக்கப்படும்.

புதுவை- கடலூர் வழியாக வரும் விஜய், மரப்பாலம் அருகே திரும்பி இந்த உப்பளம் மைதானத்திற்கு வருவதற்கான வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது போல் விஜய்யை பார்க்க அதிகம் கூட்டம் கூடும் என்பதால் புதுவையில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+