புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுவை பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்வு.. மாணவர்கள் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

புதுவை: புதுவை பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுவையில் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. எம்பிஏ படிப்புக்கு இரு ஆண்டுகளுக்கு ரூ 3,27, 900 கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது போல் எம்சிஏவுக்கு 225 சதவீதம் கல்விக் கட்டணத்தை அதிகரித்துள்ளது.

Pondicherry University students are set to call out for a strike for fees hike

இந்தியாவில் உள்ள 49 பல்கலைக்கழகங்களில் இங்குதான் கல்விக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன என கூறி மாணவ அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவ அமைப்புகள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடிதம் எழுதின.

சிபிஐக்கு 2 வாரம்தான் டைம்.. அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி சிபிஐக்கு 2 வாரம்தான் டைம்.. அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி

அதில் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்துக்குள் விடுதி அமைக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை ரூ .1000- லிருந்து 300 ரூபாயாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவ அமைப்புகள் முன் வைத்துள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது. இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

English summary
Pondicherry University students are set to call out for a strike, as the administration and VC practice silence over the Fee Hike issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X