”நாங்கள் என்ன அனாதைகளா?” காரைக்காலை தமிழ்நாட்டுடன் இணைக்க வலுக்கும் கோரிக்கை.. போஸ்டரால் பரபரப்பு
புதுச்சேரி: காரைக்காலை தமிழ்நாடோடு இணைக்க பொது வாக்குகெடுப்பு நடத்த புதுவை அரசு தயாரா? என்ற கேள்வியுடன் ஆட்சியர் அலுவலகம் எதிரே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கிறது.
Recommended Video
தமிழ்நாட்டுக்கு அருகே தமிழ் பேசும் மக்களை கொண்ட யூனியன் பிரதேசம் புதுச்சேரி. இதன் கட்டுப்பாட்டில் நாகப்பட்டினம் அருகே உள்ள காரைக்கால், ஆந்திரா அருகே உள்ள ஏனாம் ஆகியவை வருகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு காரைக்கால் மாவட்ட மக்களை கண்டுகொள்வதில்லை என்றும், காரைக்காலை எல்லா விதங்களிலும் புறக்கணிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அரசு பணி, விழாக்கள், சாலை வசதி என எந்த ஒரு நல திட்டங்களையும் புதுச்சேரி அரசு காரைக்காலுக்கு செய்து தர முன் வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

பல்வேறு அமைப்புகள் இது தொடர்பாக தங்களின் கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில் இன்று காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காரைக்காலின் முக்கிய இடங்களில் உள்ள சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "அசிங்கம்! அவமானம்!! வெட்கம்!! புதுவை அரசே..? நாங்கள்... என்ன அனாதைகளா...!
காரைக்கால் மக்களுக்கு காலம் காலமாக எவ்வித அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் வழங்காத புதுவை அரசை நாங்கள் புறக்கணிக்கிறோம். காரைக்காலை தமிழ்நாட்டோடு இணைப்போம். பொது வாக்குகெடுப்பு நடத்த புதுவை அரசே தயாரா?" என குறிப்பிட்டு உள்ளது. மிகச்சிறிய மாநிலமான புதுச்சேரியில் உள்ள காரைக்காலை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் அந்த சுவரொட்டியில் காரைக்கால் தமிழ்நாட்டோடு இணைக்கும் இயக்கம் என குறிப்பிடப்பட்டு மொபைல் எண்களும் அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications