மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பூஸ்டர்.. கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்த மக்கள்
புதுச்சேரியில் மீனவர்கள் வலையில் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம் சிக்கியது.
Recommended Video
துச்சேரி: புதுச்சேரியில் மீனவர்கள் வலையில் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம் சிக்கியது.
வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் சிலர் பைபர் படகில் இன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றார்கள். அப்போது மீனவர்கள் விரித்த வலையில் ஏதோ பெரிய உருளை சிக்கிக்கொண்டதை கண்டனர்.

அதன்பின்பு வலையை பத்திரமாக மீட்டு, மிதந்து வந்த அந்த உருளையை 4 படகுகள் உதவியுடன் வம்பாகீரப்பாளையம் கலங்கரை விளக்கம் அருகே கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அளித்தவுடன் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த உருளையை சோதனை செய்தார்கள்.

சோதனையில் அந்த உருளை, பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை மேலே உந்துவதற்காக, ராக்கெட்டினை சுற்றி 5 எரிபொருள் நிரப்பிய உருளைகள் என்பது தெரியவந்தது. மேலும் இது தீயை கக்கிக்கொண்டு ராக்கெட்டை மேலே கொண்டு செல்லும்.

எரிபொருள் முடிந்தவுடன் இந்த உருளையினை ராக்கெட் விடுவித்து விடும். அது ஆழ்கடலில் விழுந்து விடும். அவ்வாறு விழுந்த அந்த உருளை கடல் சீற்றத்தால் கரைப்பகுதிக்கு வந்திருக்கக்கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் இதன் தகவலை சேகரித்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதள அதிகாரிகளுக்கு தெரிவிக்க உள்ளார்கள். ராக்கெட்டின் பாகம் கடற்கரை பகுதியில் ஒதுங்கியது குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவினர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றார்கள். சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.













Click it and Unblock the Notifications