கதறிய குழந்தை! சாக்லேட் என நினைத்து எலி பேஸ்டை சாப்பிட்டு.. துடிதுடிக்க பலி! புதுச்சேரியில் பரிதாபம்
புதுச்சேரி: பெற்றோர்களின் அலட்சியத்தால் சமீபகாலமாக சிறு குழந்தைகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில், சாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட்டை சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணமாக மாறியிருக்கிறது.
தாயார் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், முழுக்க முழுக்க உறவினர்களின் கவனக்குறைவால் தான் அந்தக் குழந்தை உயிரிழந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவனம் அவசியம்
பொதுவாக, பிறந்த புதிதில் குழந்தைகளை பார்ப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது. குழந்தையின் பசிக்கு பாலூட்டி, அதை தூங்க வைப்பதே தாய்மார்களின் வேலையாக இருக்கும். ஆனால், குழந்தைகள் நடக்க ஆரம்பித்தவுடன் அவற்றை மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டும். ஏனெனில், அந்தக் குழந்தைகள் நடை பயின்ற மகிழ்ச்சியில் எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்கவும், கைக்கு எட்டும் பொருட்களை எடுக்கவும் முயற்சிக்கும். அப்படி எடுக்கும் பொருட்களை சட்டென வாயில் போடும் பருவமும் இதுதான். இது பல நேரங்களில் உயிரிழப்பு வரை செல்லக்கூடும். அப்படியொரு பரிதாப சம்பவம்தான் புதுச்சேரியில் நடந்துள்ளது.

கணவர் இழந்த பெண்
புதுச்சேரியில் புதுசாரம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் மேரி ரோஸ்லின். இவருக்கு 3 வயதில் தியா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவர் இறந்துவிட்ட நிலையில், மேரி ரோஸ்லின் தான் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வருகிறார். வேலைக்கு சென்றால் குழந்தையை பார்ப்பதற்காக தனது தாய், தந்தை, சகோதரிகள் ஆகியோரையும் தனது வீட்டில் வைத்துள்ளார் ரோஸ்லின்.

எமனாக மாறிய எலி பேஸ்ட்
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி காலை மேரி ரோஸ்லின் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது குழந்தை தியா வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. ரோஸ்லினின் பெற்றோரும், சகோதரிகளும் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தாக தெரிகிறது. அப்போது நீண்டநேரமாக குழந்தையின் சத்தம் வராததால் அவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது குழந்தை தியா வாயில் நுரையுடன் கீழே மயங்கிக் கிடந்தது. மேலும், அதன் அருகே எலி பேஸ்ட்டும் இருந்துள்ளது.

பரிதாபம்..
எலி பேஸ்ட்டும் சாக்லேட் போன்ற கவரில் இருந்ததால், சாக்லேட் என நினைத்து குழந்தை தியா, எலி பேஸ்ட்டை சாப்பிட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனில்லாமல் குழந்தை தியா நேற்று உயிரிழந்தது. இதுகுறித்து தன்வந்தரி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications