மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை ஏன் புறக்கணிக்கிறீர்கள்.. நாராயணசாமி ஆவேச கேள்வி
புதுவை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் புதுச்சேரியை ஆள வேண்டும் என்பதற்காகவே மாநில அந்தஸ்து கேட்கிறோம். சுஷ்மா ஸ்வராஜ் குழு பரிந்துரைத்த பிறகும் மத்திய அரசு மாநில அந்தஸ்தை கொடுக்க மறுக்கிறது என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
புதுவையில் காங்கிரஸ்- திமுக கூட்டணியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் முதல்வர் நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பை நிகழ்த்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று காலை புதுவை சட்டசபை கூடியது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பை நாராயணசாமி கோரினார். இதையடுத்து அவர் சட்டசபையில் தங்கள் அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டும் மத்திய அரசை குற்றம்சாட்டியும் பேசினார்.

பயிர்கள் நாசம்
அவர் பேசுகையில் மழையால் பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 25 ஆயிரம் வழங்கினோம். கொரோனா காலத்தில் களத்தில் இருந்து பணியாற்றினேன். கொரோனா நேரத்தில் சிலர் வீடுகளை விட்டு கூட வெளியே வரவில்லை. நிவர் புயலின் போது வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டேன். விவசாய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தோம்.

கிரண்பேடி
புதுவை ஆளுநராக இருந்த கிரண்பேடி அன்றாடம் அரசுக்கு தொல்லை கொடுத்து வந்தார். யார் எத்தனை தொல்லை கொடுத்தாலும் மக்களுக்காக பாடுபடுவோம். 3. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். புதுவையில் நடைபெற்று வருவதை அனைத்து மக்களும் பார்த்து வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமை எங்கள் ஆட்சிக்கு உண்டு.

95 சதவீதம் நிறைவேற்றம்
புதுவை ஆளுநராக இருந்த கிரண்பேடி அன்றாடம் அரசுக்கு தொல்லை கொடுத்து வந்தார். யார் எத்தனை தொல்லை கொடுத்தாலும் மக்களுக்காக பாடுபடுவோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். புதுவையில் நடைபெற்று வருவதை அனைத்து மக்களும் பார்த்து வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமை எங்கள் ஆட்சிக்கு உண்டு.

அ்நதஸ்து
புதுச்சேரிக்கு மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. மாநிலத்தின் வருமானத்தை குறைக்க வேண்டும் என்று சதி திட்டம் தீட்டினார்கள். புதுவைக்கான மாநிலத்தையும் மத்திய அரசு குறைத்து விட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் புதுச்சேரியை ஆள வேண்டும் என்பதற்காகவே மாநில அந்தஸ்து கேட்கிறோம். சுஷ்மா ஸ்வராஜ் குழு பரிந்துரைத்த பிறகும் மத்திய அரசு மாநில அந்தஸ்தை கொடுக்க மறுக்கிறது என்றார் நாராயணசாமி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications