பாஜகவுக்கு “ஷாக்” கொடுத்த ரங்கசாமி! மாறும் புதுச்சேரி “கிளைமேட்”.. மத்திய அரசு மீது திடீர் “அட்டாக்”
புதுச்சேரி: அரசின் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் மத்திய அரசு காலதாமதம் செய்வதாக மத்திய அமைச்சர் முன்னிலையிலேயே முதலமைச்சர் ரங்கசாமி குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரி வந்த மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, பாரதி பூங்காவில் மின் ஒளி ஆயி மண்டபம், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயில் பயணியர் வசதிகள், படித்துறை மேம்பாடு, திருநள்ளாறு ஆன்மீக பூங்கா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு நீல கொடி தரச்சான்றிதழ் ஆகிய திட்டங்களை துவக்கி வைத்தார்.
இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி அளித்துள்ளதும், மேலும் நிதி வழங்க ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்த வேண்டிய சிறிய மாநிலம். சுற்றுலா வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

சுற்றுலா மேம்பாடு
சொந்த நிதி ஆதாரத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. மேலும் வணிக வரித்துறை, கலால்துறை, பத்திரப்பதிவு துறைகள் மூலம் வருவாய் கிடைக்கிறது. இதுதவிர சுற்றுலா வளர்ச்சியின் மூலம் வருவாய் கிடைக்கும். மத்திய அரசு நிதியை முறையாக கொடுத்து, சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்திலும் மத்திய அரசின் அனுமதி
நிர்வாகத்தில் சில நடைமுறை சிக்கல்களால் காலதாமதம் ஏற்படுகிறது. அனைத்து விஷயங்களுக்கும் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறித்த காலத்தில் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. சிலவற்றை தளர்த்தி திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டியுள்ளது. எதை விரைவாக செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும்.

காலதாமதத்தால் முன்னேற்றம் இல்லை
வேகமான முன்னேற்றம் இல்லாத நிலைக்கு காலதாமதம் ஒரு காரணம். நிர்வாகத்தில் சிறு, சிறு தடங்கல்களால் காலதாமதம் ஏற்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்ட தேடலில் புதுவை முதலிடத்தில் உள்ளது பெருமைக்குரியது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும். நட்சத்திர விடுதிகளின் தேவை உள்ளது. இதற்கு அனுமதி கொடுப்பதில் சிக்கல் இருக்கிறது.

முதலீடு செய்ய அச்சம்
புதுச்சேரியில் முதலீடு செய்தால் உடனுக்குடன் லாபம் ஈட்ட முடியும் என்ற நிலை இருந்தால்தான் முதலீடு செய்ய வருவார்கள். பலர் முதலீடு செய்ய அச்சப்படுகின்றனர். இந்நிலை மாறினால் புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். புதுவையை சிங்கப்பூர்போல மாற்ற முடியும். புதுச்சேரியில் விரைவான வளர்ச்சி வர வேண்டும் என பேசினார்.

புதுச்சேரி அரசு
நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் புதுச்சேரியில் ஆட்சியில் இருந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. என்.ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், புதுச்சேரி ஆளுநர் தமிழிசையின் தலையீடு அரசின் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. பாஜக எம்.எல்.ஏக்களும் முதலமைச்சருக்கு எதிராக பல தருணங்களில் பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்?












Click it and Unblock the Notifications