அதிமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜன் தூக்குப்போட்டு தற்கொலை.. புதுச்சேரி வீட்டில் சோகம்.. ஷாக் காரணம்
புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ நடராஜன் திடீரென்று தனது வீட்டில் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி உழவர்கரை அதிமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜன் இன்று திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். வில்லியனூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டை போல் புதுச்சேரியிலும் அதிமுக கட்சி செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் வசித்து வந்தவர் நடராஜன்.
இவர் அதிமுக சார்பில் 2 முறை எம்எல்ஏவாக இருந்தார். முன்னாள் எம்எல்ஏவான இவர் அதிமுக மாநில செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

2 முறை எம்எல்ஏவாக தேர்வு
இவர் கடந்த 1991ல் முதன் முதலாக உழவர்கரை சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இதில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு கடந்த 1996ல் நடந்த தேர்தலிலும் அதே தொகுதியில் களமிறங்கிய நடராஜன் மீண்டும் வெற்றி பெற்றார். இதன்மூலம் 2வது முறையாக அவர் எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு 2001, 2006 தேர்தலில் உழவர்கரையில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார். மேலும் கடந்த 2016 தேர்தலில் மங்களம் தொகுதியில் நடராஜன் போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

தூக்கிட்டு தற்கொலை
இதையடுத்து அவர் தனது தொழில்களை கவனித்து கொண்டு அதிமுக கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் இன்று வில்லியனூரில் உள்ள வீட்டில் நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து வில்லியனூர் போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

குடும்ப பிரச்சனையில்..
மேலும் நடராஜன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர் குடும்ப பிரச்சனையால் மனம் உடைந்து தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எப்படி நடந்தது?
அதாவது நடராஜனுக்கும், அவரது மகனுக்கும் இடையே தொழில் ரீதியாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடராஜன் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று வீட்டில் தனியாக இருந்த நிலையில் நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications