Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுவையில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் இன்று முதல் உயர்வு! வர்த்தக மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் இன்று மீண்டும் உயர்த்தப்படுகிறது. ஆனால் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பழைய மின் கட்டணமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநில மின் துறையின் வரவு செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

puducherry eb eb tariff


அதன்படசி 2023- 2024 ஆம் நிதியாண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய அந்த ஆணையத்திடம் விண்ணப்பிக்க அப்போதைய துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் கொடுத்தார்.

இதையடுத்து மின் கட்டண உயர்வு தொடர்பாக அந்த ஒழுங்கு முறை ஆணையத்திடம் புதுவை மின் துறை விண்ணப்பித்திருந்தது. அதன்படி இந்த ஆண்டு வீட்டு உபயோகத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 50 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தவும், வர்த்தக பயன்பாட்டுக்கு சராசரியாக ஒரு ரூபாய் வரை கட்டணம் உயர்த்தவும் புதுவை அரசு கேட்டிருந்தது.

2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான மின் கட்டண நிர்ணயம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டமும் நடந்தது. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகளால் கட்டண உயர்வு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் அருச விண்ணப்பத்தில் திருத்திய கட்டணத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.

அதற்கான கோப்புகள் வெள்ளிக்கிழமை அன்று புதுவை அரசுக்கு கிடைத்துள்ளது. அதன் படி புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான முன் கட்டணம் ரூ.2.25-ல் இருந்து ரூ. 2.75 ஆக உயர்த்த புதுச்சேரி அரசு கோரியது. அதை ரூ. 2.70 ஆக உயர்த்த அனுமதி தரப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ. 3.25-ல் இருந்து ரூ. 4 ஆகவும் 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5.40-ல் இருந்து ரூ. 6 ஆகவும் 301 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் ரூ. 6.80-ல் இருந்து ரூ. 7.50 ஆகவும் உயர்த்த புதுச்சேரி அரசு கோரியதை ஆணையம் அனுமதித்துள்ளது.

வர்த்தக நிறுவனங்களுக்கும் கட்டணத்தை உயர்த்த புதுவை அரசு அனுமதி கோரியிருந்த நிலையில் அந்த ஆணையமோ அதற்கு அனுமதி தரவில்லை. இதனால் பழைய கட்டணமே தொடரும். அதே நேரம் நிலைக் கட்டணம் 1 கிலோவாட் ரூ. 75-ல் இருந்து ரூ. 200 ஆக உயருகிறது. இக்கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+