மத்திய அரசின் சம்பள முறை.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. புதுச்சேரியில் தீபாவளி போனஸ் எவ்வளவு?
புதுச்சேரி: மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்சவரம்பை ரூ.7 ஆயிரமாக நிர்ணயித்து நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் சம்பள முறையைப் பின்பற்றும் புதுவை யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும், இந்த உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டு தீபாவளிக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வாரு மாநில அரசுகளும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் புதுச்சேரியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு இன்று போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்சவரம்பை ரூ.7 ஆயிரமாக நிர்ணயித்து நிதி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் சம்பள முறையைப் பின்பற்றும் புதுவை யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும், இந்த உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக புதுசேரியில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் கிடைக்க போகிறது. மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுவை அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவகுமார் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு நகலானது வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம், கருணை தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, மிகை ஊதியம் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பான ரூ.21,000-ஐ தளர்த்தி, அனைத்து 'சி’, 'டி’ பிரிவு பணியாளர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம், கருணை தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மான கழகம், அரசு போக்குவரத்து கழகங்கள், நுகர்பொருள் வாணிப கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் (ஆவின்) பணிபுரியும் தகுதியுடைய 'சி’, 'டி’ பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33 சதவீத மிகை ஊதியம், 11.67 சதவீத கருணை தொகை என மொத்தம் 20 சதவீதம் மிகை ஊதியம், கருணை தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் - கழிவுநீர் அகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'சி’, 'டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீத மிகை ஊதியம், 1.67 சதவீத கருணை தொகை வழங்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'சி’, 'டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீத மிகை ஊதியம் வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணை தொகையாக வழங்கப்படும்.
இதனால் மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 முதல் அதிகபட்சம் ரூ.16,800 வரை பெறுவார்கள். மொத்தத்தில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 75 ஆயிரத்து 670 தொழிலாளர்களுக்கு ரூ.369.65 கோடி மிகை ஊதியம், கருணை தொகையாக வழங்கப்படும். இதுதவிர, பல்வேறு கூட்டுறவு அமைப்புகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியாக வெளியிடப்படும்" என்று தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டிருந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications