புதுச்சேரியிலும் தீபாவளிக்கு அடுத்த நாள் லீவுதானாம்.. ஜாலியா கொண்டாடுங்க!
புதுச்சேரி: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தீபாவளிக்கு அடுத்த நாள் அக்டோபர் 28ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் இன்னொரு சந்தோஷ செய்தியையும் மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது பி அன்ட் சி அரசு ஊழியர்களுக்கு போனசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு வருவதற்காக தீபாவளி பண்டிகைக்கு மறு நாளான அக்டோபர் 28 ஆம் தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை என்றும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் சி மற்றும் பி குரூப் பிரிவு ஊழியர்களுக்கு ரூ.6,908 ம், தினக்கூலி ஊழியர்களுக்கு 1,184 ம் போனஸ் வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் அக்டோபர் 28ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து நேற்றுதான் தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications