புதுச்சேரி + கேரளா + அசாமில் வெல்லப்போவது யார்? நாளை சட்டசபை தேர்தல்.. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு
புதுச்சேரி : கேரளா, அசாம் உள்ளிட்ட 2 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள நிலவரம் பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் கேரளா, அசாம் மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஒரே கட்டமாக வரும் 9 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
நாளை காலை 7 மணிக்கு புதுச்சேரி, கேரளா, அசாமில் ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற உள்ளது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதுபற்றிய முழுவிவரம் வருமாறு:
புதுச்சேரியில் யாருக்கும் யாருக்கும் போட்டி?
புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது புதுச்சேரியில் பாஜக - என்ஆர் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக உள்ளார்.
நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் கட்சியாக என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் பாஜக, அதிமுக, எல்ஜேகே உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணியில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்ளன. ஆட்சியை தக்க வைக்கும் வகையில் ரங்கசாமி, பாஜக தலைவர்களான பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்தனர். அதேவேளையில் ஆட்சியை பிடிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்தனர். ராகுல் காந்தி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
இதுதவிர விஜயின் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்கி உள்ளது. இவர்கள் 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். மொத்தமாக புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 294 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். பொதுமக்கள் ஓட்டளிப்பதற்காக 1,099 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் யாருக்கும் யாருக்கும் போட்டி
கேரளாவை எடுத்து கொண்டால் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு மொத்தம் 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பினராயி விஜயன் உள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். இந்த முறை இந்த கூட்டணி வென்றால் ஹாட்ரிக் வெற்றியாகும். இதனால் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய இடதுசாரி கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.
அதேவேளயைில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி எப்படியாவது ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. இதுதவிர பாஜக தலைமையிலான கூட்டணியும் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் களத்தில் குதித்துள்ளது.
மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமாக 30,471 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அசாமில் யாருக்கும் யாருக்கும் போட்டி?
அசாம் வடகிழக்கு மாநிலமாகும். இங்கு பாஜகவின் ஆட்சி நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சி தான் நடந்து வருகிறது. தற்போது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராக உள்ளார்.
இங்கு மொத்தம் 126 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு மொத்தம் 64 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது ஆளும் பாஜக கூட்டணி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 722 வேட்பாளர்கள் உள்ளனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். பிறகு மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
-
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம்












Click it and Unblock the Notifications