புதுச்சேரி: தேர்தலுக்குப் பின் இரண்டாக உடையக் காத்திருக்கும் என்.ஆர். காங்.- தலைகீழாய் மாறும் களம்
புதுச்சேரி: சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கதி என்னவாகுமோ? என்பதுதான் புதுச்சேரி அரசியலில் ஹாட் டாபிக்.
புதுச்சேரியில் பதவி காலத்தை நிறைவு செய்யும் முன்னரே நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டது. இதில் என்.ஆர். காங்கிரஸின் ரங்கசாமியும் முக்கிய பங்கு வகித்தார்.

அமித்ஷா போட்ட குண்டு
இதையடுத்து என்.ஆர். காங்கிரஸ்-பாஜக- அதிமுக கூட்டணி உறுதியாகி கொண்டிருந்தது. அப்போது நமச்சிவாயம்தான் பாஜகவின் முதல்வர் என்கிற அடிப்படையில் காரைக்கால் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இதனால் முதல்வர் பதவியை எதிர்பார்த்த ரங்கசாமி அதிருப்தி அடைந்தார்.

நிலைக்குமா கூட்டணி?
இந்த அதிருப்திகளால் கூட்டணி உறுதியாவதில் இழுபறியானது. பின்னர் ரங்கசாமி ஒருவழியாக சமாதானமடைந்து கூட்டணி இறுதி செய்யப்பட்டது. திமுக- காங்கிரஸ் கூட்டணி எதிர் அணியாக களத்தில் இருந்தது. தற்போதைய இதே நிலவரம் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் நீடிக்குமா? என்பதுதான் இப்போதைய கேள்வி.

உடைக்க காத்திருக்கு இருதலை கொள்ளிகள்
ஏனெனில் ரங்கசாமியை பொறுத்தவரை முதல்வர் பதவி தமக்குதான் என்பதில் இன்னமும் திட்டவட்டமாக இருக்கிறார். ஆனால் ரங்கசாமி கட்சியை சேர்ந்த சிலரோ தங்களுக்கு என்ன இலாகா கொடுக்கிறார் என்பதை பொறுத்து முடிவெடுப்போம் என விட்டேத்தியாகவே இருக்கின்றனர். இவர்களைத்தான் இருதலை கொள்ளிகள் என செல்லமாக சுட்டிக்காட்டுகிறது புதுவை அரசியல்.

என்.ஆர். காங். உடையும்?
ரங்கசாமி முகாமில் இருக்கும் இருதலை கொள்ளிகள், நாளை கட்சியையே உடைத்து ரங்கசாமியின் முதல்வர் கனவை தவிடுபொடியாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ரும் கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை ரங்கசாமி மிக மோசமான துரோகத்துக்குள்ளானால் அரசியல் களமே புதுச்சேரியில் அடியோடு மாறிப் போகலாம் எனவும் பேச்சு அடிபடுகிறது.

களநிலவரம் மாறும்
அப்படி ரங்கசாமி தனிமைப்படுத்தப்பட்டால் திமுக- காங்கிரஸ் கூட்டணி அவரை அரவணைக்கவும் தயங்காது. புதுவையில் அரசியல் கட்சிகளை விட தனிநபர்கள்தான் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றனர். இதனால் ஒருவேளை ரங்கசாமியிடம் இருந்து விலக நினைத்தவர்கள் கூட திமுக இப்படி ஒரு மூவ் எடுத்தால் மீண்டும் பல்டியக்கவும் தயங்கமாட்டார்கள் எனவும் கோடிட்டு பேசுகின்றனர். ~புதுவை அரசியல் இப்பவே கண்ணைகட்டுதே! இது எத்தனை கட்சிகளுக்கு பொருந்துமோ!!
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications