”விஜய் ஒரு ஆளுனு.. அவர் என்ன செய்ய போறாரு!.” பாதுகாப்பு கெடுபிடிகளால் கடுப்பான புதுச்சேரி மக்கள்
புதுச்சேரி: விஜய் பிரச்சாரம் இன்று புதுச்சேரியில் நடைபெற உள்ளது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பங்கேற்கும் முதல் பிரச்சார நிகழ்வு என்பதால் அங்குக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே விஜய் பிரச்சாரத்திற்காகக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளால் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகப் புதுச்சேரி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கு எல்லாக் கட்சிகளும் தயாராகி வருகிறது. பிரச்சாரமும் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி தவெக என்ற கட்சியை ஆரம்பித்துள்ள விஜய்யும் கடந்த செப்டம்பர் மாதம் இதற்கான பிரச்சாரத்தில் இறங்கினார். திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

ஒவ்வொரு வாரமும் பல்வேறு இடங்களிலும் பொதுமக்களைச் சந்தித்தார். இந்தச் சூழலில் தான் கடந்த செப்டம்பர் மாதம் விஜய் பிரச்சாரத்தில் எதிர்பார்க்காத துயரம் நடந்தது. விஜய் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40+ பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விஜய்யின் சுற்றுப் பயணம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் இரு மாதங்களுக்குப் பிறகு விஜய் மீண்டும் பிரச்சாரத்திற்குத் திரும்பியுள்ளார். புதுச்சேரி உப்பளம் திறந்தவெளி மைதானத்தில் பிரச்சாரம் செய்கிறார். அங்கு 5000 பேர் மட்டுமே கூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அனுமதி இல்லை. இப்படி பல்வேறு கட்டுப்பாடுகளோடு இன்றைய தினம் இந்தப் பிரச்சாரக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் விஜய் கலந்து கொண்டு பேசுகிறார்.
மேலும், இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து யாரும் பங்கேற்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தவெக தலைமையும் தமிழகத்தில் இருந்து யாரும் வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. இருந்தபோதிலும், காலையிலேயே பலரும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல முயன்றுள்ளனர். புதுச்சேரி எல்லையில் போலீசார் தீவிரச் சோதனை நடத்திய நிலையில், தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
எல்லையில் மட்டுமில்லாமல் புதுச்சேரியிலும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உப்பளம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளன. நேற்றிரவு முதலே இந்தக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போக்குவரத்து மாற்றத்தால் அவதிப்பட்ட மக்கள் புலம்பும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் ஒருவர், "விஜய் இங்க வந்து எங்களுக்கு என்ன செய்ய போறாரு. அவரெல்லாம் ஒரு ஆளுனு முக்கிய சாலைகளை பிளாக் செய்கிறீர்கள்.. பொதுமக்கள் எல்லாம் எப்படி செல்வது. பக்கத்துத் தெருவில் இருக்கும் வீட்டிற்குச் சுத்தி போகச் செல்கிறீர்கள். நேற்று இரவு முதலே இப்படித் தான் செய்கிறீர்கள்.. ரொம்ப அராஜகம் செய்கிறீர்கள்" என்கிறார்.
பாதுகாப்பை உறுதி செய்யவே இந்தக் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது என்ற போதிலும் இதனால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ












Click it and Unblock the Notifications