புதுவையில் மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு- ஒருவர் மரணம்
புதுச்சேரி: புதுவையில் மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரியில் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்று புதுச்சேரியில் நேற்று 255 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானது.
கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 12 பேரும் ,ஜிப்மர் மருத்துவமனையில் 18பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 9 பேர் குணம் அடைந்து வீட்டுக்கு சென்றனர்.
இன்று காலை கிருமாம்பாக்கத்தை சேர்ந்த 64 வயது ஆண் ஒருவர் இறந்து உள்ளார். இவருக்கு நீரழிவு மற்றும் ரத்த கொதிப்பு இருந்தது. கொரோனா வைரஸ் மூலம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இறந்து உள்ளார்.

இதுவரை புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 366 ஆக உயர்ந்துள்ளது. 8 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர். தற்போது இந்த கொரோனா வைரஸ் 3 மாத குழந்தை முதல் 82 வயது வரை உள்ள அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் பரவி வருகிறது. எனவே பொது மக்கள் சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும், முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
இவ்வாறு மோகன்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications