வீட்டை விட்டு வெளியே போகாத நாராயணசாமி.. ஊரடங்கு அனுஷ்டிப்பு!
புதுச்சேரி: பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களை போன்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமியும் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்துகொண்டு சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடுமுழுவதும் மக்கள் இன்று ஒரு நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்குமாறு வலியுருத்தியிருந்தார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்திலும் 100 சதவீத மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றும், பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக, புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி இன்று வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.


மேலும் வீட்டில் இருந்துகொண்டே காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொண்டு அங்குள்ள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து, உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். மேலும் வரும் 31 ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளின்றி, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications