புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு.. பாதிப்பு எண்ணிக்கை 193 ஆக உயர்வு
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒரு டயாலிசிஸ் நோயாளி உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 176 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 92 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அரும்பார்த்தபுரத்தை தற்காலிக முகவரியாக தெரிவித்திருந்த விழுப்புரம் மாவட்டம் குமளம் பகுதி, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று புதிதாக மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி திலாஸ்பேட்டை பீமன் நகரை சேர்ந்த நபர் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, புதுச்சேரி திலாசுப்பேட்டை பீமன் நகரைச் சேர்ந்த 56 வயது நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டயாலிசிஸ் சிகிச்சைக்காக ஜிப்மர் சென்றார். அங்கு அவருக்கு சந்தேகத்தின் பேரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 9 ஆம் தேதி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் புதுச்சேரி வீமன்நகர், சின்ன கொசபாளையம், கோரிமேடு, கிருமாம்பாக்கம் மற்றும் மாகே பகுதியை சேர்ந்த 17 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications