புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவர் உள்ளிட்ட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று.. பாதிப்பு 107 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவர் உள்ளிட்ட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 62 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் புதிதாக ஜிப்மர் மருத்துவர் உள்ளிட்ட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Puducherry state Coronavirus update

இதையடுத்து அவர்களில் 3 பேரும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 60 ஆகவும், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107 ஆகவும் உள்ளது. ஏற்கனவே 42 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 5 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

Puducherry state Coronavirus update

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், புதுச்சேரியில் புதியதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுபோல் 5 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.

கொரோனாவால் பலியான நபர்.. சவக்குழியில் உடலை அசால்டாக தூக்கிபோடும் ஊழியர்கள்.. ஷாக்கிங் வீடியோ!கொரோனாவால் பலியான நபர்.. சவக்குழியில் உடலை அசால்டாக தூக்கிபோடும் ஊழியர்கள்.. ஷாக்கிங் வீடியோ!

Recommended Video

    கொரோனாவால் பலியான நபர்.. சவக்குழியில் உடலை அசால்டாக தூக்கிபோடும் ஊழியர்கள்.. ஷாக்கிங் வீடியோ!

    தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் ஒருவர் ஜிப்மர் மருத்துவர். மற்ற இரண்டுபேர் ஏற்கனவே தொற்றில் இருந்தவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என மோகன்குமார் தெரிவித்தார்.

    English summary
    107 were infected with corona in Puducherry state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X