புதுச்சேரியில் ஒரே நாளில்.. 8 மாத கர்ப்பிணி உட்பட 16 பேருக்கு கொரோனா
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று 8 மாத கர்ப்பிணி உள்பட புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் வியாழக்கிழமை வரை 271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 116 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 148 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது புதிதாக காரைக்காலைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி உள்பட 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேருக்கு தொற்று எப்படி பரவியது என்பது தெரியவில்லை. மற்றவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், கர்ப்பிணி சென்னை சென்று திரும்பியவர் ஆவார்.

இதனிடையே 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 162 ஆகவும் உயர்ந்துள்ளது என்று கூறினார்.

இதனிடையே புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வருபவர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கப்படாததால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க சட்டப்பேரவையில் பொதுமக்கள், பார்வையாளர்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவையைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீஸார் மற்றும் சட்டப்பேரவைக் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தடை மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டப்பேரவைப் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications