Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறுக்கு வழியில் வந்து கொரோனாவை பரப்பிவிட்டு செல்லும் தமிழக மக்கள்.. புதுவை முதல்வர் குற்றம்சாட்டு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: சென்னை, கடலூர், விழுப்புரத்தில் இருந்து வருவோராலேயே புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவுகிறது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 3 ஆம் தேதியிலிருந்து கடைகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இரவு 9 மணி வரை செயல்படுவதற்கு உத்தரவிட்டோம். அதன் பிறகு சென்னையில் மிகப்பெரிய அளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது.

Puducherry state chief minister V.Narayanasamy press conference

சென்னையிலிருந்து வருபவர்கள் மூலமாக புதுச்சேரியிலும் பரவ ஆரம்பித்தது. ஜூன் 8 ஆம் தேதியிலிருந்து கோயில், தேவாலயம், மசூதிகளை திறந்து பாதுகாப்பான முறையில் வழிபட உத்தரவிட்டாலும் கூட கூட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து 14 ஆம் தேதி வரை கொரோனா தொற்றின் தாக்கம் 67 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர், சுகாதார அதிகாரிகளை அழைத்து பேசினேன். புதுச்சேரியில் இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை வெளியில் யாரும் நடமாடக் கூடாது. வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என உத்தரவு போட்டிருந்தோம்.

Puducherry state chief minister V.Narayanasamy press conference

அது நேற்றிலிருந்து செயல்பட ஆரம்பித்துள்ளது. அதன் அடிப்படையில் கொரோனா தொற்று குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. சிவப்பு மண்டலமான சென்னையில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்த பிறகு, அங்கு இருப்பவர்கள் யாரிடமும் கூறாமல் குறுக்கு வழியில் புதுச்சேரிக்கு நுழைகிறார்கள்.

இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். கடுமையான நோய் இருப்பவர்களை தவிர்த்து யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவிட்ட பிறகு நிலைமை மாறும் என்று நினைக்கிறேன். நம்முடைய மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவுதற்கு காரணமாக இருப்பது, சென்னை, விழுப்புரம், கடலூர் பகுதியாகும்.

Puducherry state chief minister V.Narayanasamy press conference

அங்கிருந்து வருபவர்கள் இங்கே கொரோனாவை பரப்பி விட்டு செல்கின்றனர். இதனால் புதுச்சேரி, காரைக்காலில் பல இடங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் யார் உள்ளே வந்தாலும் அனுமதிக்க கூடாது. மீறி வந்தால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

இன்று காலை நானும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்று அய்வு செய்தோம். அங்கு ஒரு நாளைக்கு 300 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தினமும் 100 பேருக்குதான் எடுக்கப்படுகிறது. அதனை உயர்த்த வேண்டும் என உத்தரவிட்டேன்.

Puducherry state chief minister V.Narayanasamy press conference

ஜிப்மரில் தினமும் 300 பேருக்கு பரிசோதனை செய்ய உபகரணங்கள் உள்ளன. ஆனால், அங்கு குறைந்த அளவிலேயே பரிசோதனை செய்கிறார்கள். அங்கும் பரிசோதனையை உயர்த்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். மேலும், மருத்துவர்கள் புதுச்சேரி மக்களை காப்பாற்றுவதற்கு முழுமையாக பாடுபட வேண்டும் என வலியுறுத்தி கூறினேன்.

இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது, தேவையான ஊழியர்கள் வேண்டும். மருத்தவ உபகரணங்கள் அதிகமாக வாங்கி தர வேண்டும் என கல்லூரி பேராசிரியர்கள் கூறினார்கள். மாநில சுகாதார இயக்கக கூட்டத்தில் எடுத்த முடிவுபடி தேவைப்படுகிற மருத்துவர், செவிலியர், ஆஷா பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கிறோம்.

முதல்வர் நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உபகணரங்கள் வாங்க தயாராக உள்ளோம் என்றேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற மனப்பான்மை மருத்தவர்களுக்கு வந்துள்ளது. நாம் இந்த மருத்துவர்கள், செவிலியர்களை ஊக்குவிக்க வேண்டும்.

Puducherry state chief minister V.Narayanasamy press conference

ஞாயிற்றுகிழமைகளில் இயங்கும் சண்டே மார்க்கெட் திறக்க மாநில அரசு சார்பில் அனுமதி வழங்க மாட்டோம். மீறி கடைகள் வைப்போர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். கடைகளின் நேரம் குறைப்பது குறித்து கடை வியாபாரிகளை அழைத்து பேசி முடிவு செய்யப்படும்.

காவல்துறை பணியாளர் நியமனம் சம்மந்தமாக காவல்துறை தலைவரை அழைத்து பேசி உடனடியாக நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனாவை வைத்து காலதாமதம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளேன். அதே போல் மின்துறை, கல்வித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 9 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒருபுறம் கொரோனா தொற்றை தடுக்க பணிபுரிந்தாலும், மற்றொருபுறம் அரசு இயந்திரம் செயல்பட வேண்டும். மாநிலத்துக்கு வருவாயை உருவாக்க பொருளாதார வளர்ச்சி ஏற்படுதவற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாநிலத்தை பொருத்தவரை மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் கரோனாவை கட்டுப்படுத்த முடியும் என நாராயணசாமி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+