ஆட்டோகிராப் கேட்ட கல்லூரி மாணவி.. பரவசத்தில் கண்ணீர் விட்டதால் கட்டி அணைத்த ராகுல்.. வைரல் வீடியோ!
புதுவை: புதுவையில் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய போது ஆட்டோகிராப் பெற்றவுடன் துள்ளிக் குதித்து கண்ணீர் விட்ட மாணவியை கட்டி அணைத்த ராகுல்காந்தி அவரை ஆசுவாசப்படுத்தினார். இதன் மூலம் ராகுலின் எளிமையை அனைவரும் உணர்ந்தனர்.
Recommended Video
ராகுல் காந்தி கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண தமிழகத்திற்கு வந்தார். அப்போதே எளியவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அருகில் உள்ள வயதானவர்களின் இலையை கவனித்து அவர்களுக்கு மேற்கொண்டு பரிமாறுமாறு கூறினார்.
இதிலேயே தமிழக மக்களின் அன்பை பெற்றார். இதையடுத்து தமிழகத்தில் திருப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

புதுவை காங்கிரஸ்
இந்த நிலையில் புதுவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அங்குள்ள மீனவ கிராமத்தினருடன் உரையாடல் நடத்தினார். அங்கு ஆங்கிலத்தில் பேசிய ஒரு பெண்ணை தமிழில் பேசுமாறு தெரிவித்தார்.

பெண்கள் கல்லூரி
தமிழில் பேசுவது தனக்கு பிடித்திருப்பதாகவும் கூறினார். இதையடுத்து அவர் பாரதிதாசன் பெண்கள் கல்லூரிக்கு சென்றிருந்தார். அங்கு கல்லூரி பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்தார். அப்போது அவர் ஒரு பெண் அவரிடம் ஆட்டோகிராப் வேண்டும் என கேட்டார்.

மாணவி
மேடையில் நின்றிருந்த ராகுலிடம் ஒரு பேப்பரை அந்த மாணவி கொடுத்தார். அவர் தனது முட்டியில் வைத்தபடியே கையெழுத்து போடும் போது அந்த பெண் பரவசமடைந்தார். இதை கவனித்த ராகுல் காந்தி கையை குலுக்கி அந்த பேப்பரை கொடுத்தார். அந்த பேப்பரில் ராகுலின் கையெழுத்தை பார்த்த மாணவிக்கு இன்னும் மகிழ்ச்சி ஏற்பட்டு ஆனந்த கண்ணீர் விடுத்தார்.

மாணவியை கட்டி அணைத்த ராகுல்
உடனே ராகுல் அந்த பெண்ணை மேடையில் முட்டி போட்டபடியே கட்டி அணைத்து தேற்றினார். தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். ராகுல் காந்தியின் இந்த எளிமையை அனைவரும் விரும்பினர். மாணவிகள் ராகுலை அண்ணா என அழைத்தனர். இது போன்ற நல்ல தலைவர் தங்கள் கல்லூரிக்கு வந்தது தாங்கள் செய்த பாக்கியம் என மாணவிகள் ஆரவாரம் செய்தனர்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications