புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓரம்போ ஓரம்போ ரங்கசாமி வண்டி வருது.. கியூவில் நிற்காமல் ஓட்டுப் போட்டுச் சென்ற என்.ஆர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கியூவில் நிற்காமல் ஓட்டுப் போட்டுச் சென்ற என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி-வீடியோ

    புதுச்சேரி: வரிசையில் நிற்காமல் எல்லை கோட்டை மீறி தனது இருசக்கர வாகனத்தில் வந்து ஓட்டுபோட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியால் லேசான பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதிக்கான தேர்தல் மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

    Rangasamy casts his vote

    இத்தேர்தலில் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோர் மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் நின்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ரங்கசாமி திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    Rangasamy casts his vote

    வாக்குப்பதிவு மையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருக்க, வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வந்த ரங்கசாமி தடைசெய்யப்பட்ட 200 மீட்டர் எல்லையை கோட்டை தாண்டி வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு, வரிசையில் நிற்காமல் தன்னுடைய நேராக சென்று வாக்கை பதிவு செய்தார்.

    எந்த புகார்னாலும் இரண்டே நிமிஷம் தாங்க நடவடிக்கை எடுக்க.. சென்னை காவல் ஆணையர் பேட்டி எந்த புகார்னாலும் இரண்டே நிமிஷம் தாங்க நடவடிக்கை எடுக்க.. சென்னை காவல் ஆணையர் பேட்டி

    முதலமைச்சர், ஆளுநர், சினிமா நட்சத்திரங்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வரும் வேலையில், ரங்கசாமி நேராக சென்று வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Former Puducherry CM N Rangasamy violated poll code and parked his vehicle inside the polling booth before casting his vote.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X