கொரோனா எதிரொலி.. புதுச்சேரியில் சிறை கைதிகளுக்கு பரோல் ரத்து.. உறவினர்கள் சந்திக்கவும் தடை!
புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி மாநில சிறைகளில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதி மறுத்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா அச்சுறுத்தலால் கைதிகளின் பரோலும் ரத்து செய்து சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மத்திய சிறைச்சாலையும், காரைக்கால் மற்றும் மாஹே, ஏணாம் பிராந்தியங்களில் கிளை சிறைச்சாலைகளும் உள்ளன. புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் 200 விசாரணை கைதிகள் மற்றும் 100 தண்டனை கைதிகள் என 300 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அனுமதி பெற்று வருவது உண்டு. தண்டனைக் கைதிகளுக்கு வாரத்தில் இரு நாட்களும், விசாரணைக் கைதிகளுக்கு வாரத்தில் இரு நாட்களும், வழக்கறிஞர்கள் அனைத்து நாட்களிலும் விண்ணப்பித்து கைதிகளை சந்திக்கலாம் என்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது.

தற்போது புதுச்சேரி அரசு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், புதுச்சேரி சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை உறவினர்கள், வழக்கறிஞர்கள் சந்திக்க வரும் 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக சிறைத்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பரோலும் ரத்தாகியுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என மருத்துவ குழுக்கள் மூலம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications