புதுச்சேரியில் ஓய்வு பெற்ற ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் கொலை
புதுவை: புதுச்சேரியில் வீட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஜிப்மர் மருத்துவமனை ஊழியரான 74 வயது முதியவரை மர்மநபர்கள் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் காக்காயன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(74). ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியரான இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது வீட்டு மாடியில் சுப்பிரமணி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

உடனடியாக இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் அரியாங்குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணி, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே இவரது வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனவே பணத்திற்காக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications