அலறும் புதுச்சேரி.. ஒரே வாரத்தில்.. ஒரே ஸ்டைலில்.. 2 கொலைகள்.. ரவுடி அன்பு ரஜினியை வெட்டிய கும்பல்!
புதுச்சேரி ரவுடி அன்பு ரஜினி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்
Recommended Video
புதுச்சேரி: ரவுடி ஜிம் பாண்டியனின் தலை கொத்தாக அறுக்கப்பட்டு 4 நாள்கூட ஆகவில்லை.. அதற்குள் ரவுடி அன்பு ரஜினியை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது புதுச்சேரியை அலற வைத்துள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி அன்பு ரஜினி... ஏகப்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் தமிழகம், புதுச்சேரி என பாகுபாடு இல்லாமல் இரு மாநிலங்களிலும் இவர் மீது உள்ளன.

புதுச்சேரிக்குள் பிற ரவுடி கோஷ்டிகளுடன் அன்பு ரஜினிக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கொஞ்ச நாட்களாக இவரை தீர்த்து கட்ட நிறைய சம்பவங்களும் நடந்ததாக தெரிகிறது. இந்த சமயத்தில்தான், இவர் சுற்றி வளைத்து கொல்லப்பட்டுள்ளார்.
காரில் இவர் வந்து கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் இவர் மீது வெடிகுண்டு வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியும் பதட்டமும் அடைந்த அன்பு ரஜினி, நடுவழியிலே காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால், அதற்குள் அந்த கும்பல் ரஜினியை சுற்றி வளைத்து கொண்டது. வசமாக சிக்கிய அன்பு ரஜினியை அரிவாளாலேயே சரமாரி வெட்டினர் அந்த மர்ம நபர்கள்.
இதில் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார் அன்பு ரஜினி. தகவலறிந்து முத்தியால்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த கும்பல் யார், அன்பு ரஜினியை கொலை செய்ய காரணம் என்ன? என்பதெல்லாம் உடனடியாக தெரியவில்லை. எனினும், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை துரிதமாகி வருகிறது.
இதே பாணியில்தான் ஜிம் பாண்டியனையும் கொலை செய்துள்ளனர். முதலில் வெடிகுண்டை வீசியும், அதன்பின்னர் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியும் கொன்றுள்ளனர்.. ஒரே ஸ்டைலில் ஒரே வாரத்தில் இரண்டு கொலைகள் நடந்துள்ளது புதுச்சேரி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications