கையெடுத்து கும்பிட்ட ரவுடி பேபி சூர்யா.. ஆபாச வீடியோ? நாங்களா? புதுச்சேரி போலீஸ் முன்பு திணறிய ஜோடி

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: சிறுமிக்கு ஓயாமல் ஆபாச மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்த நபர் மீது போலீசில் புகார் தரப்பட்டது. இதுசம்பந்தமாக ஒருவர் கைதாகி உள்ள நிலையில், ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
புதுச்சேரியை சேர்ந்தவர் அந்த சிறுமி.. 11ம் வகுப்பு படித்து வருகிறார்.. இந்த சிறுமி இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது நேரத்தை செலவிட்டு வந்துள்ளார்.. அப்போது ஒருநாள், சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு, ஒரு மெசேஜ் வந்துள்ளது.. பிறகு வீடியோ வந்துள்ளது.. ஆனால், இவைகளை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை.

மெசேஜ்: இப்படி மெசேஜ், வீடியோ என்று அனுப்பிக் கொண்டிருந்த அந்த புதிய நபருடன், சிறுமி நாளடைவில் நட்பாகிவிட்டார்.. பிறகு இருவரும் மாறி மாறி மெசேஜ், வீடியோ என்று பரிமாறிக் கொண்டார்கள்.

rowdy baby surya youtuber puducherry

இப்படியே 15 நாட்கள் சென்றபிறகு, அந்த புதிய நபர், திடீரென சிறுமிக்கு ஏராளமான ஆபாச வீடியோக்களை அனுப்ப துவங்கினார்.. ஒருகட்டத்தில், சிறுமியின் ஆபாச வீடியோவையும் அனுப்பி வைத்து, சிறுமியை மிரட்ட தொடங்கினார்.. அப்போதுதான், சிறுமிக்கு உதறல் எடுத்தது.. இதுகுறித்து தன்னுடைய அம்மாவிடம் கூறியிருக்கிறார்..

போலீஸில் புகார்: விஷயத்தை கேட்டு அதிர்ந்த அம்மா, உடனடியாக புதுச்சேரி சைபர் போலீசாருக்கு புகார் தந்தார்.. இதையடுத்து, இன்ஸ்டாகிராம் மூலமாக அந்த வீடியோவை அனுப்பியது யார் என்று விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.

இறுதியில், சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டியது, மதுரையை சேர்ந்த யூடியூபர் சிக்கந்தர்-சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலி என்பது தெரியவந்தது. இந்த அஷ்ரப் அலிக்கு 24 வயதாகிறது.. இவரது சித்திதான், "ரவுடி பேபி சூர்யா" ஆவார்.

நேரில் விசாரணை: இதையடுத்து, மதுரைக்கு விரைந்த போலீசார், அஷ்ரப் அலியை கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்து ஜெயிலில் அடைத்தனர்.. இதற்கு நடுவில், ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் ஷா, சுமி ஆகிய 3 பேர் மீதும் சிறுமியின் தாயார் புகார் தந்தார்.. தங்கள் மீது போலீஸில் புகார் கொடுத்ததால், கொந்தளித்த சூர்யா, சிக்கந்தர் தரப்பினர், சிறுமியின் குடும்பத்தை மிரட்டியதாக தெரிகிறது.. எனவே, இவர்கள் 3 பேரையுமே சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்க போவதாக உறுதி தந்திருந்தனர்.

அதன்படியே, ரவுடி பேபி சூர்யா, சுமி, கணவர் சிக்கந்தர் ஷா ஆகியோரை, சைபர் க்ரைம் போலீசார் நேற்று புதுச்சேரிக்கு அழைத்துவந்து நேரில் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் ஆய்வாளர்கள் கீர்த்தி, தியாகராஜன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

நடவடிக்கை பாயும்: அப்போது ரவுடி பேபி சூர்யா, "தங்களுக்கும்,இந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தங்களை வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் யாரோ சிக்க வைத்துள்ளனர்" என்று கூறி, அதிகாரிகளிடம் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டார். 3 பேரும் விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த விசாரணை அடிப்படையில் 3 பேர் மீதும் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே, கிரைம் போலீஸ் அதிகாரி இது தொடர்பாக, நடத்தப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி, இணையத்தை பரபரப்பாக்கி வருகிறது. தனி அறையில் ரவுடி பேபி சூர்யா, சிக்கா, சுமி ஆகியோர் நின்று கொண்டிருக்க, இவர்களுக்கு எதிரே, போலீஸ் அதிகாரி சேரில் உட்கார்ந்து கேள்விகளை எழுப்புகிறார்.

மாறி மாறி விளக்கம்: அதற்கு 3 பேருமே மாறி மாறி பதிலளிக்கிறார்கள்.. தங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்ற விளக்கம் தருகிறார்கள். மேலும், இந்த குற்றச்சாட்டை தங்கள் மீது வீசியவர் என்று ஒருவரது பெயரையும் சொல்கிறார்கள். உடனே போலீஸ் அதிகாரி, அப்படியானால், அது தொடர்பான விவரங்களையும் எழுதி தரும்படி கேட்கிறார்..

இந்த விசாரணையின்போது, இவர்கள் 3 பேரும் விளக்கம் தந்தபோது, குறுக்கிட்ட அதிகாரி, "எங்களுக்கு என்ன செய்யணும்னு நீங்க சொல்லித்தராதீங்க.. நாங்க எல்லா தரப்பிலும்தான் விசாரிப்போம்" என்று கண்டிக்கிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+