நடுத் தெருவில் சரமாரி வெட்டு.. ரத்த வெள்ளத்தில் சரிந்த சாணி குமார்.. புதுச்சேரியில் அதிர்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டு, வெளியே வந்த பிரபல ரவுடியை மர்ம சராமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் சமீபகாலமாக கொலைகள் அதிகரித்துள்ளன. சரமாரியான படுகொலைகளால் புதுவையே அதிர்ந்து போய்க் கிடக்கிறது. குறிப்பாக ரவுடிகள் கொலை அதிகரித்தவண்ணம் உள்ளது.
அந்த வகையில் இன்று ஒரு படுகொலை நடந்துள்ளது. கொல்லப்பட்ட நபரின் பெயர் சாணி குமார். பெரிய ரவுடி.

கலாம் நகர் சாணி குமார்
புதுச்சேரி வாணரப்பேட்டை அப்துல்கலாம் நகர் பகுதியை சார்ந்தவர் பிரபல ரௌடி சாணிகுமார். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

ஆயுள் தண்டனைக் கைதி
இந்நிலையில் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த சாணிகுமார், தண்டனை முடிந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விடுதலையாகி வெளியே வந்துள்ளார். இதனிடையே நேற்று நள்ளிரவு வாணரப்பேட்டை பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா சாணிகுமார் கலந்துகொண்டுள்ளார்.

சரமாரி வெட்டு
அப்போது முகமூடி அணிந்துவந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் ரவுடி சாணிகுமார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். ஆனால் சாணிகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் சாணிகுமாரை அவரது வீட்டின் அருகே சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

மக்கள் அதிர்ச்சி
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு வெடிகுண்டு வீச்சில் உயிர் தப்பிய ரவுடி, காலையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications