புதுச்சேரியில் பிரபல ரவுடி மகன் உள்பட 3 பேர் படுகொலை! காலி மனையில் நடந்த கொடூரம்
புதுச்சேரி: புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் பிரபல ரவுடி மகன் உட்பட 3 இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் டிவி நகரை சேர்ந்த பிரபல ரவுடி சத்யாவின் வீடு உள்ளது. கொலை உட்பட பல்வேறு வழக்குகள் சத்யா மீது உள்ள நிலையில் அவர் அங்கு இல்லாததால் தற்போது அந்த வீடு காலி மனையாக உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை அந்த வீட்டில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் 3 இளைஞர்கள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் பெரியகடை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது 2 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக டிஜிபி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்பி கலைவாணன் தலைமையில் முத்தியால்பேட்டை,பெரியக்கடை மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தது பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரிஷி, திடீர் நகரை சேர்ந்த தேவா,ஜெ.ஜெ நகரை சேர்ந்த ஆதி என்பது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் டிவி நகரை சேர்ந்த பிரபல ரவுடி சத்யா, அந்த மூவரையும் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலைகளை அவர் மட்டும் செய்தாரா? கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications