மாணவர்கள் மோதல்.. விலக்கி விடப் போன எச்.எம்.. கொலை வெறித் தாக்குதல்.. மருத்துவமனையில் அனுமதி!
Recommended Video
புதுச்சேரி: மாணவர்களுக்கிடையே நடைபெற்ற சண்டையை விளக்கிவிடச் சென்ற தலைமை ஆசிரியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் காயமடைந்தார்.
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயராமன். இங்கு பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஜலாலுதீன் சக மாணவர்களுடன் பள்ளி வளாகத்திலேயே சண்டை போட்டுள்ளார்.

இதனையறிந்து வந்த தலைமையாசிரியர் ஜெயராமன், சண்டையை தடுத்து நிறுத்தி, மாணவர்களை வகுப்பறைக்கு சென்று படிக்குமாறு கூறியுள்ளார். தலைமையாசிரியர் பேச்சைக் கேட்டு சக மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர். ஆனால் ஜலாலுதீன் மட்டும் வகுப்புச் செல்லாமல், தலைமையாசிரியர் ஜெயராமனை ஒருமையில் பேசியுள்ளார்.

மேலும் தன் கையில் வைத்திருந்த புத்தகத்தை தலைமை ஆசிரியர் மீது வீசி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த தலைமையாசிரியர் ஜெயராமனை சக ஆசிரியர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து ஆரோவில் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மாணவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை ஆசிரியர் மீது மாணவன் ஒருவன் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பள்ளியின் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?











Click it and Unblock the Notifications