செவிலியர் பணி செய்யும் தானியங்கி ரோபோ.. புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை!
புதுச்சேரி: கொரோனா வைரசால் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, உணவு, மருந்து உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக தானியங்கி ரோபோ ஒன்றை புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்வி மையத்தில் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களால் செவிலியர்கள் பணிகளை செய்யும் V2 BUUDY ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று உள்ள நோயாளிகளுக்கு காய்ச்சலின் அளவை கண்டறிவது, மருந்துகள் அளிப்பது, கிருமிநாசினி வழங்குவது உள்ளிட்ட பணிகளை இந்த ரோபோ மூலம் செய்யலாம். அது மட்டுமின்றி சிகிச்சை பெறுபவர் இடம் காணொலி காட்சி மூலம் நேரடியாக உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ளலாம்.



மேலும் நோயாளிகள் இருக்கும் அறைக்குள் செல்லாமலேயே அவர்களுக்கு உணவும் வினியோகம் செய்ய முடியும்.
இந்த ரோபோவானது ஒருவித செயலின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ரோபோ ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகிறது.



இது குறித்த சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் கூறுகையில், இந்த புதிய கண்டுபிடிப்பு மருத்துவ துறையில் உபயோகமானதாக இருக்கும். இதன் செயல்பாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் பார்வையிடுவார்கள். அதன் செயல்பாடுகளில் திருப்தி ஏற்படும் பட்சத்தில் அதை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்துவோம் என தெரிவித்தார்.



-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications