மாநிலம் ஆகுமா புதுச்சேரி? தமிழிசையின் முக்கிய கையெழுத்து - மாநில அந்தஸ்து தீர்மானத்துக்கு ஒப்புதல்
புதுச்சேரி: புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரிய தீர்மானத்துக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்ததாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம் அளித்து உள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தனி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது அங்குள்ள பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக 13 முறை புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் 31 ஆம் தேதி நிறைவடைந்தது.

கடைசி நாளில் புதுச்சேரி மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க சட்டப்பேரவையில் தனி மாநில தீர்மானத்தை அம்மாநில அரசு கொண்டு வந்தது. திமுக உட்பட 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை வழங்கினார்கள். இந்த தீர்மானத்தை என்.ஆர்.காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரித்தனர்.
இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு இதனை தீர்மானமாக கொண்டு வருவதாக அறிவித்தார். ஆளும் அரசுக்கு உரிமை வேண்டும் என்றால் தனி மாநில அந்தஸ்து மட்டுமே ஒரே தீர்வு. நாம் பலமுறை சட்டப்பேரவையில் இதை வலியுறுத்தி இருக்கிறோம். ஆனால், மத்திய அரசு பார்ப்போம் என்று மட்டுமே சொன்னது.
அவ்வளவு வலி இருக்கிறது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களே இது பற்றி விரிவாக பேசி உள்ளார்கள். இதனை மத்திய அரசுக்கு கொண்டு சென்று உரிமையை பெறுவோம். மத்திய அரசும் உறுதுணையாக உள்ளது. இதில் வெற்றிபெறுவோம். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அழைத்து சென்று இந்த ஆண்டுக்குள் அனுமதி பெறுவோம் என்றார்.

இதனை தொடர்ந்து 14 வது முறையாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அரசு நிறைவேற்றியது. ஆனால், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தீர்மானத்துக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில் கடந்த ஜூலை 22 ஆம் தேதிதான் புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் கோப்பு ஆளுநருக்கு வந்ததாகவும், ஜூலை 23 ஆம் தேதியே அதற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications