"மனு" என்றாலே தமிழகத்திற்கு அலர்ஜி.. சூடுபிடிக்கும் சோழர்கள் விவாதம்! சீனுக்கு வந்த ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி: பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து இணையம் முழுக்க சோழர்கள் குறித்து பேச்சு எழுந்துள்ள நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சில பரபர கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி காரைக்காலில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு நீதிமன்றங்களைத் திறந்து வைத்தனர்.

புதுச்சேரி முதல்வர்
இந்த விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, "புதுச்சேரியில் நீதிமன்றங்களில் போதிய வசதி இல்லை என்ற புகார் வந்து இருந்தது. அதன் அடிப்படையில் புதுச்சேரியிலும், காரைக்காலிலும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் கட்டப்பட்டுள்ளது.. நீதிமன்றங்களுக்குத் தேவையான வசதியைப் புதுச்சேரி அரசு செய்து வருகிறது.. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. மிக விரைவில் காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றையும் தொடங்க உள்ளோம்" என்றார்.

தமிழிசை
இதில் துணைநிலை ஆளுநர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், "நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாமதப்படுத்தக் கூடாது.. தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதைக் கருத்தில் கொண்டு வழக்கு விசாரணை நடக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கும் சட்ட ஆலோசனை மற்றும் சட்ட பாதுகாப்பு கிடைத்திடும் வகையில் சட்டத்துறை மற்றும் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்.

மனுநீதிச் சோழன்
உலகத்தில் நீதி வழுவாமல் இருந்த நாடு தமிழகம்.. மனுநீதிச் சோழனைப் போல நீதி வழங்கியவர்கள் உலகில் இல்லை. இதை நினைத்து நாம் எப்போது வேண்டுமானாலும் பெருமை கொள்ளலாம்... இரண்டாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீதித்துறையின் சின்னம் துலாக்கோல் எனத் திருக்குறளில் எடுத்துரைத்தவன் தமிழன் என்பதை நினைத்து நாம் பெருமிதம் கொள்ளலாம்.

அலர்ஜி
ஆனால் மனு என்ற பெயரைக் கேட்டால் தமிழகத்தில் அலர்ஜியாக இருக்கிறது.. எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் கூட, மாநில மக்கள் கொண்டாடும் பண்டிகைகளை மதிக்க வேண்டிய பொறுப்பு தலைமை பொறுப்பில் இருக்கும் நபர்களுக்கு இருக்க வேண்டும். இதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்" என்று அவர் பேசினார். பொன்னியின் செல்வனுக்கு பிறகு எங்குப் பார்த்தாலும் சோழர்கள் பேச்சு எழுந்துள்ள நிலையில், தமிழிசையின் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மருத்துவமனை
அந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, "காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் காரைக்காலில் பணிபுரிந்து வருகின்றனர். மிக விரைவில் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

வேளான் தள்ளுபடி
அதேபோல ஜிப்மர் மருத்துவமனை புதிய கட்டிடங்கள் திறக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். காரைக்காலில் புதிய கிளை சிறைச்சாலை அமைக்கப்படுவதற்கும் தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்த வேளாண் கடன் தள்ளுபடிக்குக் குறித்த அரசாணையும் மிக விரைவில் வெளியிடப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications